இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் கடந்த 2018ல் இந்திய அணியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 31 சராசரி மற்றும் 5.81 எக்கனாமியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 18 டி20 போட்டிகளில் 35.12 சராசரி மற்றும் 8.51 என்ற எக்கனாமியில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இன்னும் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகவில்லை. ஆனால், அவர் 12 முதல் தர போட்டிகளில் அவர் 35 சராசரியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். புதிய பந்தை ஸ்விங் செய்யும் திறன் மற்றும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு இருந்தபோதிலும், இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mahi bhai is not my friend…he is my guru: Khaleel Ahmed
இந்த நிலையில், கலீல் அகமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியைப் புகழ்ந்து பேசியுள்ளார். தோனி தனது நண்பர் இல்லை என்று கூறியுள்ள கலீல் அகமது, அவர் தனது "குரு" என்று குறிப்பிட்டுள்ளார்.
கலீல் அகமது 2018-ல் நடந்த ஆசியக் கோப்பை தொடரின் போது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி அவரை முதல் ஓவரை வீசச் சொல்லி இருந்தார். இதுபற்றிய நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.
"எனது சிறுவயதில் இருந்தே, ஜாகீர் கான் முதல் ஓவரை வீசுவதைப் பார்த்து, இந்திய அணிக்காக நானும் முதல் ஓவரை வீசும் பந்துவீச்சாளராக ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆசிய கோப்பையில் மஹி பாய் (எம்.எஸ் தோனி) என்னை முதல் ஓவரை வீசச் சொன்னார். நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர் மனம் மாறிவிடலாம் என்று நினைத்து, அவரது கூறிய உடனேயே மிகவும் கஷ்டப்பட்டு ஓவர் போட ஓடி வந்தேன். என்னைப் பொறுத்தவரையில், ஒரு அணியின் மிக முக்கியமான வீரர் தான் முதலில் வந்து பந்து வீசுவார்." என்று கலீல் அகமது கூறினார்.
தோனி உடனான புகைப்படம் குறித்து ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் கலீல் அகமது பேசுகையில், “இந்தப் புகைப்படம் நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது. முக்கிய மைதானத்தில் இருந்து பயிற்சி மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது மஹி பாய்க்கு அவரது நண்பர்கள் மலர்கள் கொடுத்தனர். நான் அவருடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அந்த மலர்களை அவர் என்னிடம் கொடுத்தார். மஹி பாய் என் நண்பர் அல்ல, என் மூத்த சகோதரர் அல்ல, அவர் என் குரு." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.