/indian-express-tamil/media/media_files/m5XTTKCas8UeVt92aman.jpeg)
கேலோ இந்தியா போட்டிகள்; கோவையில் நாளை துவங்கும் போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் தீவிரம்
தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகள் கோவையில் நாளை துவங்குகிறது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்கான முன்னேற்பாடுகள் இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் 25 ஆம் தேதி வரை பேஸ்கட் பால் போட்டிகளும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தாங்டா போட்டிகளும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கோவையில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கான தங்கும் இடம், உணவு, போக்குவரத்து ஆகிய வசதிகளை மாநில மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைப்புகள் உருவாக்கியுள்ளன.
இந்த விளையாட்டுகளை காண்பதற்காக பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.