scorecardresearch

உலகின் நம்பர்.1 பேட்மிண்டன் வீரரானார் கிடம்பி ஸ்ரீகாந்த்!

ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், நம்பர்.1 வீரராக இடம்பிடித்துள்ளார். உலக பேட்மிண்டன் சம்மேளனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது. 25 வயதான கிடம்பி ஸ்ரீகாந்த் கடந்த 2017ம் ஆண்டிலேயே முதலிடம் பிடித்து இருக்க வேண்டியவர். ஆனால், காயம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் இழந்தார். ஆனால், இம்முறை அவர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த விக்டர் அக்சல்சன் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 76,895 புள்ளிகள் பெற்று ஸ்ரீகாந்த் நம்பர்.1 இடத்திற்கு வந்தார். இதன் […]

உலகின் நம்பர்.1 பேட்மிண்டன் வீரரானார் கிடம்பி ஸ்ரீகாந்த்!
ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த், நம்பர்.1 வீரராக இடம்பிடித்துள்ளார். உலக பேட்மிண்டன் சம்மேளனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

25 வயதான கிடம்பி ஸ்ரீகாந்த் கடந்த 2017ம் ஆண்டிலேயே முதலிடம் பிடித்து இருக்க வேண்டியவர். ஆனால், காயம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் இழந்தார். ஆனால், இம்முறை அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்த விக்டர் அக்சல்சன் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 76,895 புள்ளிகள் பெற்று ஸ்ரீகாந்த் நம்பர்.1 இடத்திற்கு வந்தார்.

இதன் மூலம், பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக, சாய்னா நேவால் பெண்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கணினி தரவரிசை முறை இல்லாத காலத்திலேயே, பிரகாஷ் படுகோன் நம்பர்.1 பேட்மிண்டன் வீரராக இருந்தவர் என்று கூறப்படுவது உண்டு. இவர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை ஆவார்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kidambi srikanth becomes first indian male shuttler to rise to world no 1 ranking

Best of Express