Advertisment

ரொம்ப பொல்லாதவன்யா இந்த பொலார்ட் : எப்படியெல்லாம் யோசிக்கிறான் பாரு.....

Pollard no ball trick : பொலார்ட்டின் இந்த சமயோசித நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் விவாதங்களுக்கு தீனிபோடும் அளவிற்கு மாறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kieron pollard, kieron pollard no ball, umpire ahmed shah dhurrani, afghanistan vs west indies 3rd odi, afg vs wi 3rd odi, west indies vs afghanistan 3rd odi, asfghar afghan, kieron pollard funny

kieron pollard, kieron pollard no ball, umpire ahmed shah dhurrani, afghanistan vs west indies 3rd odi, afg vs wi 3rd odi, west indies vs afghanistan 3rd odi, asfghar afghan, kieron pollard funny, பொலார்ட், வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட், ஆப்கானிஸ்தான், நோ பால், டெட் பால், ப்ரீ ஹிட், விவாதம்

கால் கிரீசை விட்டு தாண்டியதால், நோ பால் வீசப்போகிறோம் என தெரிந்ததும், பால் வீசாமல், ப்ரீ ஹிட்டை தவிர்ப்பதற்காக கெய்ரோன் பொலார்ட், பந்து வீசாமல் தவிர்த்த வீடியோ, கிரிக்கெட் விமர்சகர்களிடையே, விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது போட்டி, லக்னோவில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 25வது ஓவரை கேப்டன் கெய்ரோன் பொலார்ட் வீச தீர்மானிக்கப்பட்டது.. பந்தை எதிர்கொள்ள அஸ்கர் ஆப்கான் தயாராக இருந்தார். பொலார்ட் பந்துவீச ஓடிவந்த நிலையில், கால் கிரீசை விட்டு வெளியே சென்றதை கவனித்த அம்பயர் அகமது ஷா துரானி, உடனடியாக நோ பால் சிக்னல் காட்டினார்.

இதற்குள் சுதாரித்த பொலார்ட், பந்துவீசாமல், திரும்பினார். உடனடியாக அம்பயர் துரானி டெட் பால் என்று சிக்னல் காட்டியதோடு மட்டுமல்லாது பொலார்ட்டை நோக்கி புன்னகைக்கவும் செய்தார்.

ப்ரீ ஹிட் தவிர்த்துவிட்டோம் என்ற பூரிப்பில் பொலார்ட்டும் பதிலுக்கு புன்னகைத்தார்.

250 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அணி 48.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

பொலாட்டின் இந்த சமயோசித நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் விவாதங்களுக்கு தீனிபோடும் அளவிற்கு மாறியுள்ளது.

West Indies Pollard
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment