சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் அம்பயர்; வரலாறு படைத்த கிம் காட்டன்
டெஸ்ட் விளையாடும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆடவர் டி20 போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் நியூசிலாந்து நடுவர் கிம் காட்டன்.
Kim Cotton Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
Advertisment
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அனிங்களுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3வது போட்டி வருகிற 8ம் தேதி நடக்கிறது.
முதல் பெண் நடுவர்
இந்நிலையில், இந்த போட்டியில் பெண் நடுவராக செயல்பட்ட கிம் காட்டன் இரு ஆடவர் அணிகளுக்கு இடையேயான சர்வதேச போட்டியில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவர் நியூசிலாந்து ஆண் நடுவரான வெய்ன் நைட்ஸுடன் கள நடுவராக பணியாற்றினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil