scorecardresearch

நிகழ் தசாப்தத்தின் அரசன் – விராட் கோலி எனும் வெற்றி ‘உள்ளான்’

இந்த உற்சாகமான பேச்சுக்குப் பிறகுதான் கோஹ்லி உடற்தகுதியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார். அவரது பயிற்சி முறையும், உணவு முறையும் முற்றிலும் மாறியது

King of this decade the meteoric rise of Virat Kohli – இந்த தசாப்தத்தின் அரசன் – விராட் கோலி எனும் வெற்றி 'உள்ளான்' இந்திய கேப்டன் விராட் கோலி

PARVEEN K DOGRA

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வீரர், அவரது அபார உயர்வுக்காகவும், தலைமைத்துவ திறமைகளாலும் ஒட்டுமொத்த நாட்டுடைய ரசிகர்களின் விருப்பமான வீரராக மாறியிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தான்.

தீப்பொறியின் ஆரம்பம்

விராட் கோலி 2008 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 18 அன்று சர்வதேச அளவில் அறிமுகமானார். இது நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத நிகழ்வு அல்ல, ஏனெனில் அவர் இலங்கைக்கு எதிரான தனது முதல் போட்டியில் 18 ரன்களுக்கு மலிவாக ஆட்டமிழந்தார். ஒரு வருடம் கழித்து, 2009 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அதே அணிக்கு எதிராக கோஹ்லி தனது முதல் சதத்தை அடித்தார், இது சர்வதேச அரங்கில் தனது வருகையை அடையாளம் காட்டியது.

யு -19 உலகக் கோப்பை வென்ற கேப்டனின் இந்த அபாரமான ஆட்டத்தால், 2011  உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். முக்கியமான இறுதிப் போட்டியில், சிக்கலான ஒரு சூழலில் கோலி 35 ரன்களை எடுத்தார். அது, இந்திய அணி இலங்கைக்கு எதிராக 275 ரன்களை வான்கடே ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக துரத்த உதவியது. விராட் கோலி அன்றிரவு சச்சின் டெண்டுல்கரைத் தோளில் சுமந்துகொண்டு மைதானத்தை சுற்றி வந்தது என்னவோ, இன்றைய விஷயங்களின் அடையாளமாக இருந்திருக்கலாம்.

மெரீனா போராட்டத்தை நினைவுப்படுத்திய சேட்டன்கள் – கால்பந்து போட்டியில் சிஏஏவுக்கு எதிராக கோஷம் (வீடியோ)

2012 ஆம் ஆண்டில், ‘100 சர்வதேச சதம்’ எனும் சாதனையை யார் முறியடிப்பார்கள் என்று டெண்டுல்கரிடம் கேட்கப்பட்டபோது, ​​பதிலளித்த கிரிக்கெட் மேஸ்ட்ரோ, “அந்த சாதனையை தகர்க்க முடிந்தவர்கள் இந்த அறையில் மட்டுமே அமர்ந்திருப்பவர்கள் தான் என்று நான் நினைக்கிறேன். அந்த இளைஞர்களை என்னால் பார்க்க முடியும். விராட் மற்றும் ரோஹித்தால் இதனை செய்ய முடியும். ஒரு இந்தியர் எனது சாதனையை தகர்த்தால் நான் கவலைப்படமாட்டேன்” என்றார். அந்த நொடி, 7 ஒருநாள் சதம் விராட் கோலியின் தீப்பொறியையும் அர்ப்பணிப்பையும் போதுமானதாகக் காட்டின. அவர் 2011 இல் 1381 ரன்களைக் குவித்தார், அதில் நான்கு சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் அடங்கும்.

உலகக் கோப்பை வெற்றியின் வெற்றியைக் கட்டியெழுப்பிய கோஹலி, சர்வதேச அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 2015, 2016 ஆகிய இரண்டு பருவங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு காலாண்டிலும் 1000க்கும் மேற்பட்ட ஒருநாள் ரன்களை அடித்தார்.

இருப்பினும், ஃபார்ம் என்பது ஒரு பேட்ஸ்மேனை எப்போது விட்டுச்செல்லும் என்பதை எவராலும் ஒருபோதும் கணிக்க முடியாது. அவர்களை மந்தநிலையில் தள்ளும்.

‘2012 ஆம் ஆண்டில் ஒரு மோசமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தான் விளையாடிய மோசமான கிரிக்கெட்டும் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய படிப்பினை’ என்பதை உலகின் தலைசிறந்த உடற்தகுதி கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கோலி ஒப்புக் கொண்டார்.

தவிர, அவர் தனது முதல் ஐபிஎல்லில் விளையாடிய நேரத்தில் கிரிக்கெட் மீதான தனது கவனத்தை இழந்ததாகவும் ஒப்புக் கொண்டார். ஐபிஎல்-லின் கவர்ச்சி மற்றும் போட்டிக்கு பிந்தைய இரவு பார்ட்டி போன்றவற்றால், அவர் இந்திய அணியில் தனது இடத்தை இழக்க நேரிட்டது. அப்போது தீர்க்கமாக முடிவெடுத்த கோலி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எல்லாவற்றிலிருந்தும் விலகி, கிரிக்கெட்டில் தனது கவனத்தை செலுத்தி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1, 8, 25, 0, 39, 28, 0,7, 6 மற்றும் 20 என மொத்தம் 10 இன்னிங்சில் சராசரியாக 13.50 மட்டுமே வைத்திருந்தார். இந்த காலக் கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், கோலி கூறியதாவது, “நான் எனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தை கடந்துவிட்டேன், இத்தோடு உலகமே முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் உணர்ந்தேன். என்ன செய்வது, யாரிடம் என்ன சொல்வது, எப்படி பேசுவது, எப்படி தொடர்புகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை”.

ஆனால் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் போல எழுந்தவர்கள் சூப்பர் ஸ்டார்ஸ். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, கோலி தனது சர்வதேச வாழ்க்கையில் ஒருபோதும் மந்தமான தருணத்தைக் கொண்டிருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, இங்கிலாந்து சென்றபோது பேட்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்ததன் மூலம் இந்திய கேப்டன் தன்னை நிரூபித்தார். கோலி 10 இன்னிங்சில் 2 சதங்களுடன் 593 ரன்கள் குவித்து, ஐக்கிய இராஜ்ஜியத்தில் கடந்த தோல்விகளின் பேய்களை புதைத்தார்.

இந்து என்பதால் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒப்புதல்

2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனியிடமிருந்து கேப்டன்ஷிப்பை பெற்ற கோலி, அணியை மிக நீண்ட வடிவ கிரிக்கெட்டில் பெரிய வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார். 2018 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஒரு அருமையான தொடருக்குப் பிறகு, இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் டெஸ்ட் தொடரில் வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற பெயர் பெற்றார் கோலி. 2-1 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

அனைத்து வடிவங்களிலும் கோலி சாதனைகளை முறியடித்து வருகிறார். 70 நூறுடன், சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை நெருங்கி வருகிறார், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடம் வகிக்கும் கோலி, ஒரு தசாப்தத்தில் 20,000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் ஆனார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு தசாப்தத்தில் அதிக சர்வதேச ரன்களை அடித்த சாதனையை படைத்திருந்தார். அவர் அடித்த ரன்கள் 18,962.

ஒருநாள் போட்டிகளில் இருந்து டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் வரை, இந்த தசாப்தத்தில் விராட் கோலி மட்டுமே அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார். தற்போது, அவர் பல உலக சாதனைகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் – ஒரு கேப்டனின் மிக இரட்டை சதங்கள் (6), அதிவேகமாக 10000 ஒருநாள் (10 ஆண்டுகள் 67 நாட்கள்), ஒரே காலாண்டில் ஒரு கேப்டனாக அதிக சதம் (6) அடித்தவர், ஒருநாள் போட்டிகளில் (52.50%) எனும் கன்வெர்ஷன் ரேட், டெஸ்ட் போட்டிகளில் ஒரு இந்திய கேப்டனின் சிறந்த வெற்றி சதவிகிதம் (56.52%) மற்றும் உலகில் அதிக ரன்கள் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் (2633) என்று பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

உடற்தகுதியில் ஆட்சி

2011 முதல் 2020 வரை கோஹ்லியின் உருமாற்றம் என்பது, ஒரு புதிதாக பிறந்த குழந்தை என்பது முதல் ஒரு தேசிய ஹீரோவாக மாறியது, இது ஒரு புதிய பரிமாணத்தின் விளைவாகும்.

அவரது மேம்பட்ட உடற்தகுதி அவரது மனோபாவம், திறமை மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவியது மற்றும் இந்த செயல்பாட்டில், இந்தியாவிலும் பிற இடங்களிலும் கூட கிரிக்கெட் விளையாடும் முறையை மாற்றினார்.

அவரது புகைப்பட ஆல்பங்களை பார்த்தால், அவர் எப்படி ஒரு உணவுப் பிரியராக இருந்து உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தும். இது அனைத்தும் ஐபிஎல் 2012 க்குப் பிறகு டங்கன் பிளெட்சருடனான உடனடி அரட்டையுடன் தொடங்கியது. இந்த உற்சாகமான பேச்சுக்குப் பிறகுதான் கோலி உடற்தகுதியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார். அவரது பயிற்சி முறையும், உணவு முறையும் முற்றிலும் மாறியது. இதுகுறித்து டெலிகிராப் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “தொழில்முறை விளையாட்டுகளில் கிரிக்கெட் மிகவும் தொழில் சார்ந்ததல்ல என்பதாக தான் உணர்கிறேன் என்று டங்கன் ஒரு முறை என்னிடம் கூறினார்” என்றார்.

ஆரம்பத்தில் கடுமையான டயட்டை பின்பற்றுவது மிகக் கடினமாக இருந்ததாக விராட் ஒப்புக்கொண்டார். அவர் இப்போது இருப்பதை விட 11 அல்லது 12 கிலோ எடையுள்ளவர். ஆனால் பின்னர் அவர் ஒர்க் அவுட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். கோதுமை, குளிர் பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் இல்லாத ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உணவைக் கொண்டு ஜிம்மில் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டார்.

2015 ஆம் ஆண்டு முதல், தூக்குதல், பறித்தல், சுத்தம் செய்தல் மற்றும் டெட்லிஃப்டிங் ஆகிய பயிற்சியைத் தொடங்க, மீண்டும் தனது பயிற்சி முறையை மாற்றினார். அவர் கூறியது போல் இதன் விளைவு தெளிவாகத் தெரிந்தது, “இலங்கையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு பந்துக்குப் பின் ஓடியது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் எனது கால்களில் அதிக சக்தியை உணர்ந்தேன். அது, ‘வாவ்’ போல இருந்தது. இந்த பயிற்சி போதை. கடந்த ஒன்றரை ஆண்டு இது எனது விளையாட்டை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது” என்றார்.

அவரது உயர்மட்ட உடற்தகுதி மற்றும் கோஹ்லியின் பணி நெறிமுறைகள் அவரது அணியிலும் ஊடுருவி, இந்தியாவை உலகின் மிகச் சிறந்த உடற்தகுதி மிக்க கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாக மாற்றியது. ஒவ்வொரு முறையும் சம அளவு தீவிரத்தோடும், சாதிக்க வேண்டிய பசியோடும் களத்தில் இறங்குவதே விராட் கோஹ்லியை மற்றவர்களை விட வேறுபடுத்தி காட்டுகிறது.

பின்குறிப்பு – தலைப்பில் ‘உள்ளான்’ என்ற சொல்லின் பொருள் – நீருக்குள் மூழ்கும் பறவை.

அது போல கிரிக்கெட்டில் இந்த தசாப்தத்தில் வெற்றி மற்றும் சாதனையில் மூழ்கியவர் விராட் கோலி.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: King of this decade the meteoric rise of virat kohli