scorecardresearch

ஆரஞ்சு ஆர்மிக்கு அடி மேல் அடி; காவ்யா மாறன் அப்செட் ரியாக்ஷன்ஸ்: ட்விட்டர் மீம்ஸ்

ஐதராபாத் அணியின் ரசிகையும், உரிமையாளருமான காவ்யா மாறன் தனது அணி கொல்கத்தாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் சோகமுடன் காணடப்பட்டார்.

KKR beat SRH, KavyaMaran upsets twitter reactions and memes in tamil
Kolkata Knight Riders defended 171 to beat Sunrisers Hyderabad; KavyaMaran reactions Tamil News

IPL 2023 –  Kavya Maran Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு 7:30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் – நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், கேப்டன் நிதிஷ் ராணா 42 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மிரட்டிய எடுத்த கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆரஞ்சு ஆர்மிக்கு அடி மேல் அடி

கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் தோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 3ல் வெற்றி 6ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் உள்ள நிலையில், அந்த 5 போட்டிகளிலும் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

காவ்யா மாறன் அப்செட் ரியாக்ஷன்ஸ்

இந்நிலையில், ஐதராபாத் அணியின் ரசிகையும், உரிமையாளருமான காவ்யா மாறன் தனது அணி கொல்கத்தாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் சோகமுடன் காணடப்பட்டார். ஐதராபாத் அணி வீரர்கள் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட போது வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்த காவ்யா மாறன், அணியின் தோல்வியால் வெயிலில் சுருண்ட மண்புழு போல் முகம் வாடினார்.

சமூக வலைதளத்தில் அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், அவரது ரியாக்ஷன்ஸ்களை பதிவிட்டு அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். இணையவாசிகள் சிலர் காவ்யா மாறனின் சோக புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kkr beat srh kavya maran upsets twitter reactions and memes in tamil

Best of Express