KKR vs DC, IPL 2021 Highlights: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) சார்ஜாவில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் அனல் பறக்க துவங்கிய நிலையில், கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளே முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்தது. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி அணியில், அதிகபட்சமாக கடைசி வரை போராடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், அந்த அணியில் லோக்கி பெர்குசன், வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை துரத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயன்ற இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மான் கில் 33 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 30 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால்,கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், பிறகு களமிறங்கிய ராணா மற்றும் சுனில் நரைன் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணி வெற்றி இலக்கை அடைய வழிவகை செய்தது.
ஆட்டத்தில் திருப்புமுனையை அமைத்த ராணா - சுனில் நரேன் ஜோடியில், சிறப்பாக ஆடிய ராணா 27 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி 36 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 10 பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியை பறக்க விட்டு 21 ரன்கள் சேர்த்தார்.
டெல்லி அணி 20 ஓவர்களில் குவித்த 127 ரன்களை நிதான ஆட்டத்தை கடைபிடித்த கொல்கத்தா அணி 18.2 ஓவர்களிலேயே எட்டியது. மேலும் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
A gutsy show by our batsmen sees us over the line in a low-scoring thriller in Sharjah! 💜💛#KKRvDC #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/WpPMYIuyag
— KolkataKnightRiders (@KKRiders) September 28, 2021
இந்த சிறப்பான வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. தோல்வியை தழுவிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.
"𝙋𝙞𝙘𝙩𝙪𝙧𝙚 𝙖𝙗𝙝𝙞 𝙗𝙖𝙖𝙠𝙞 𝙝𝙖𝙞 𝙢𝙚𝙧𝙚 𝙙𝙤𝙨𝙩" 💪🏆#KKRvDC #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/tcsVU4H4ry
— KolkataKnightRiders (@KKRiders) September 28, 2021
Sunil's making it a habit and we're loving it! 🤩#KKRvDC #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/tHgX4iFmTx
— KolkataKnightRiders (@KKRiders) September 28, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.