Advertisment

KKR vs DC: டெல்லியை பந்தாடிய கொல்கத்தா; 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

குல்தீப் உதவியால் 153 ரன்கள் சேர்த்த டெல்லி; சால்ட் அரை சதம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி

author-image
WebDesk
New Update
KKR vs DC LIVE Score IPL 2024 Match 47 today Kolkata Knight Riders vs Delhi Capitals scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Kolkata Knight Riders | Delhi Capitals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs DC LIVE Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

டெல்லி கேபிடல்ஸ்: ப்ரித்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

டெல்லி பேட்டிங்

டெல்லி அணியில் பிரித்வி மற்றும் ஜேக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து அபிஷேக் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஜேக் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஹோப் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் ஆடிய அபிஷேக் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து அக்சர் வந்த நிலையில், பண்ட் 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 4 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து குமார் களமிறங்கிய நிலையில் அக்சர் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து குல்தீப் களமிறங்கி பவுண்டரிகளாக விளாசினார். இதற்கிடையில் குமார் 1 ரன்னிலும், ரஷீக் 8 ரன்களிலும் வெளியேறினார். அடுத்து வந்த வில்லியம்ஸ் 1 ரன் எடுத்திருந்தப்போது டெல்லி அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குல்தீப் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் 3 விக்கெட்களையும், வைபவ் மற்றும் ரானா தலா 2 விக்கெட்களையும், ஸ்டார்க் மற்றும் நரைன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் கம்பெனி கொடுக்க, மற்றொரு தொடக்க வீரர் சால்ட் பவுண்டரி மழை பொழிந்தார். நரைன் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரிங்கு களமிறங்கிய நிலையில், சால்ட் அரை சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சால்ட் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். அடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கிய நிலையில், ரிங்கு 11 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ஸ்ரேயாஸ் உடன் வெங்கடேஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். ஸ்ரேயாஸ் 33 ரன்களிலும், வெங்கடேஷ் 26 ரன்களிலும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அக்சர் 2 விக்கெட்களையும் வில்லியம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணி இதுவரை 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேவேளையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

ஏற்கனவே, இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் கொல்கத்தா 272 ரன்கள் சேர்த்து அதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Delhi Capitals Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment