IPL 2023,Lucknow vs Kolkata Cricket Match 68 Score: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ கொல்கத்தா அணிகள் மோதியது
Indian Premier League, 2023Eden Gardens, Kolkata 28 May 2023
Kolkata Knight Riders 175/7 (20.0)
Lucknow Super Giants 176/8 (20.0)
Match Ended ( Day – Match 68 ) Lucknow Super Giants beat Kolkata Knight Riders by 1 run
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க விரராக களமிறங்கிய கரண் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மன்கட் குயிண்டன் டீகாக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய நிலையில், டிகாக் 27 பந்துகளில் 28 ரன்களும், மன்கட் 20 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஸ்டொயினிஸ் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறிய நிலையில், கேப்டன் குணால் பாண்டியா 9 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ அணிக்கு ஆயுஷ் பதோனி நிக்கோலஸ் பூரன் ஜோடி ரன்கள் சேர்த்தது. இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.
குறிப்பாக நிக்கோலஸ் பூரன் அதிரடிய விளையாடி அரைசதம் கடந்த நிலையில், 30 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 58 ரன்களும், மந்தமாக விளையாடிய பதோனி 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 4 பந்துகளில் 11 ரன்கள் குவித்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் தாகூர் நரேன், ஆரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்சிட் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 177 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் அய்யர் ஜோசன் ராய் சிறப்பான தொடக்க கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் அய்யர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ராணா 8 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ரஹமத்துல்லா குர்பாஸ் 10 ரன்களுக்கும் ஆந்த்ரே ரஸல் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜோசன் ராய் 45 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் 3 ரன்களுக்கும், சுனில் நரைன் ஒரு ரன்னும் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.18 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 12 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ரின்கு சிங் களத்தில் இருந்ததால் கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை இருந்தது. அதற்கு ஏற்றார்போல் 19-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் பவுண்டரி அடித்த ரின்கு சிங் 3-வது பந்திலும் பவுண்டரி அடித்து அசத்தினார்.
அடுத்த 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரின்கு சிங் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் ரன் இல்லை என்பதால் அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. இதனால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
யாஷ் தாகூர் வீசிய கடைசி ஓவரில் ரின்கு சிங் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. கடைசிவரை வெற்றிக்காக போராடிய ரின்குசிங் 33 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி ப்ளே அப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil