IPL 2024 | Kolkata Knight Riders | Mumbai Indians: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs MI Live Score, IPL 2024
இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 16 ஓவர்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா பேட்டிங்
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக நரைன் மற்றும் சால்ட் களமிறங்கினர். சால்ட் 6 ரன்களில் வெளியேறினார். நரைன் கோல்டன் டக் ஆனார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய ஸ்ரேயாஸ் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ராணா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் ஆடிய வெங்கடேஷ் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஸல் பவுண்டரிகளாக விளாசினார்.
இதற்கிடையில் ராணா 33 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரிங்கு சிங் களமிறங்கி 2 சிக்சர் விளாசினார். ரஸல் 24 ரன்களில் வெளியேற, ரிங்கு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ராமன்தீப் 17 ரன்களுடன், ஸ்டார்க் 2 ரன்களுடன் இருந்தப் போது கொல்கத்தா ஆட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. பும்ரா, சாவ்லா தலா 2 விக்கெட்களையும், துஷாரா, அன்சூல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும். மறுபுறம், இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது.
முன்னதாக, இந்த சீசனில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே உத்வேகத்தில் கொல்கத்தா களமாடும். அதேநேரத்தில், கொல்கத்தாவிடம் கண்ட முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றி பெற மும்பை போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“