கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்த பஞ்சாப்; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL 2021, Kolkata Knight Riders (KKR) vs Punjab Kings (PBKS live updates and match highlights in tamil: கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்துள்ள பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்துள்ளது.

KKR vs PBKS Live score: KKR vs PBKS Live updates and match highlights

 KKR vs PBKS Live score, Live updates  and match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (வெள்ளிக்கிழமை) லீக் ஆட்டத்தில் இயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்க கொடுக்க முயன்ற இந்த ஜோடியில் சுப்மான் கில் (7) பஞ்சாபின் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் சிக்கி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மறுமுனையில் இருந்த வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார்.

அணியின் ரன் ரேட்டை உயர்த்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் திரிபாதி 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நேர்த்தியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் (1 சிக்ஸர், 9 பவுண்டரி) சேர்த்து அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டு 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறவே கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. தொடக்கம் முதலே பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்து கடைசி 5 ஓவர்களில் மிரட்டிய பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (12), ஐடன் மார்க்ரம் (18) தலா ஒரு சிக்க்ஸரை விளாசி ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டவே பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 134 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அணி வெற்றி இலக்கை அடையுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தொடக்க வீரர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்காக இறுதி வரை போராடிய கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்து 55 பந்துகளில் 67 ரன்கள் ( 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட) குவித்து ஆட்டமிழந்தார். அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷாருக் கான் 9 பந்துகளில் 22 ரன்கள் (2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன்) சேர்த்து களத்தில் இருந்தார்.

ஏற்கனவே நடந்த லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி தற்போது பதிலடி கொடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளது. இந்த திரில் வெற்றியின் மூலம் அந்த அணி பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. தோல்வியை தழுவியுள்ள கொல்கத்தா அணி 4வது இடத்திலே நீடிக்கிறது.

பஞ்சாப் அணியின் இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே- ஆப் சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Premier League, 2021Dubai International Cricket Stadium, Dubai   27 October 2021

Kolkata Knight Riders 165/7 (20.0)

vs

Punjab Kings   168/5 (19.3)

Match Ended ( Day – Match 45 ) Punjab Kings beat Kolkata Knight Riders by 5 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
6:05 (IST) 1 Oct 2021
பஞ்சாப் அணி வெற்றி!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

5:40 (IST) 1 Oct 2021
வெற்றியை நோக்கி பஞ்சாப் அணி!

166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 24 ரன்கள் தேவை.

5:27 (IST) 1 Oct 2021
கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம்!

166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ராகுல் 44 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசி 53 ரன்கள் சேர்த்து அரைசதம் கடந்தார்.

5:26 (IST) 1 Oct 2021
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி!

166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்துள்ளது.

தற்போது களத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் கேஎல் ராகுல் – ஐடன் மார்க்ரம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

4:36 (IST) 1 Oct 2021
பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி!

166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கேப்டன் கேஎல் ராகுல் 14 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

4:13 (IST) 1 Oct 2021
களத்தில் பஞ்சாப் அணி!

166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியுள்ளது.

3:53 (IST) 1 Oct 2021
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 165ரன்கள் சேர்த்துள்ள நிலையில் பந்து வீசிய பஞ்சாப் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

3:41 (IST) 1 Oct 2021
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தொடரும் கொல்கத்தாவின் அதிரடி!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட் இழப்பை கொல்கத்தா அணி சந்தித்தாலும் அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.

3:03 (IST) 1 Oct 2021
வெங்கடேஷ் ஐயர் அரைசதம்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்.

2:55 (IST) 1 Oct 2021
பந்து வீச திணறும் பஞ்சாப்; வலுவான நிலையில் கொல்கத்தா!

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.

2:34 (IST) 1 Oct 2021
பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீசி வரும் நிலையில், கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) 1 விக்கெட்டை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.

2:16 (IST) 1 Oct 2021
சுப்மான் கில் அவுட்!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீசி வரும் நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார்.

2:03 (IST) 1 Oct 2021
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

1:45 (IST) 1 Oct 2021
இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி

பஞ்சாப் கிங்ஸ்: KL ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

1:43 (IST) 1 Oct 2021
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்; பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

1:17 (IST) 1 Oct 2021
டெல்லி அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு!

கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெல்லும் பட்சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

1:12 (IST) 1 Oct 2021
உத்தேச அணி விபரம்:-

கொல்கத்தா அணி:

சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சவுதி, லோக்கி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா அல்லது சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி

பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா அல்லது ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், ஹர்பிரீத் பிரார், ரவி பிஷ்னோய், நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி

1:09 (IST) 1 Oct 2021
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 7:30 மணிக்கு நடக்கவுள்ள ஆட்டத்தில் இயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Web Title: Kkr vs pbks live score kkr vs pbks live updates and match highlights

Next Story
வில்லனாக சித்தரித்த ஆஸி. ஊடகங்கள்: சுடச்சுட பதில் கொடுத்த அஸ்வின்Cricket Tamil News: Ashwin’s reply tweet on Morgan and Southee controversy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X