IPL 2024 | Kolkata Knight Riders | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் 36-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
கொல்கத்தா பேட்டிங்
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக பிலிப்ஸ் மற்றும் நரைன் களமிறங்கினர். பிலிப்ஸ் பவுண்டரிகளாக விளாசி ரன் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்தது. பிலிப்ஸ் 14 பந்துகளில் 48 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து ரகுவன்சி களமிறங்கிய சிறிது நேரத்தில் நரைன் 10 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக வெங்கடேஷ் களமிறங்கிய நிலையில், ரகுவன்சி 3 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடினார். மறுபுறம் ஆடி வந்த வெங்கடேஷ் 16 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரிங்கு சிங் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரஸல் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்து அவுட் ஆனார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அடுத்து களமிறங்கிய ரமன்தீப் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ரஸல் 27, ரமன்தீப் 24 ரன்கள் எடுத்திருந்தப்போது கொல்கத்தா ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் தயாள் மற்றும் கிரீன் தலா 2 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் பெர்குசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கோலி 18 ரன்களில் அவுட் ஆனார். ஜாக்ஸ் களமிறங்கிய சிறிது நேரத்தில் டுபிளசிஸ் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஜாக்ஸ் உடன் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து அவுட் ஆனது.
ஜாக்ஸ் 32 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர், 4 பவுண்டரிகள் அடங்கும். படிதார் 23 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய கிரீன் 6 ரன்களிலும், பிரபுதேசாய் 24 ரன்களிலும், மஹிபால் 4 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து கரண் சர்மா, சிராஜ் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் வெற்றி 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கரண் 2 சிக்சர்கள் அடித்து அவுட் ஆனார். கரண் 20 ரன்களில் அவுட் ஆனார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பெர்குசன் அவுட் ஆனார்.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. கொல்கத்தா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் ரஸல் 3 விக்கெட்களையும், ரானா மற்றும் நரைன் தலா 2 விக்கெட்களையும், ஸ்டார்க் மற்றும் வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த தோல்வி மூலம் பெங்களூரு அணியின் தோல்வி தொடர்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் 4ல் வெற்றி, 2ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு 7 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது.
5 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூரு வெற்றிக்கான தேடலில் இருந்து வருகிறது. ஆதலால், அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப மிகக் கடுமையாக போராடும். அதேநேரத்தில், உள்ளூரில் களமாடும் கொல்கத்தா அதற்கு முட்டுக் கட்டையைப் போட்டு ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா அணி 20 முறை வென்றுள்ளது. பெங்களுரு அணி 14 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.