IPL 2024 | Kolkata Knight Riders | Rajasthan Royals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs RR LIVE Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா பேட்டிங்
கொல்கத்தா அணியில் சால்ட் மற்றும் நரைன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சால்ட் 10 ரன்களில் அவேஷ் கான் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த நரைன் அரைசதம் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் 11 ரன்களிலும், ரஸ்ஸல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இருப்பினும் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 2 சிக்சர்கள் அடித்தார்.
மறுமுனையில் ஆடிய வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரமன்தீப் 1 ரன் எடுத்திருந்த நிலையில் கொல்கத்தா ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். இராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்களையும், போல்ட், சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஷ்வால் 19 ரன்களில் அவுட் ஆனார். சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரியான் சற்று அதிரடி காட்டினார். மறுமுனையில் ஆடிய பட்லர் அரை சதம் அடித்தார். ரியான் 34 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த் துருவ் 2 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் அவுட் ஆகினர். ஹெட்மயர் டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பவல் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த போல்ட் ரன் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதற்கிடையில் பட்லர் சதம் விளாசினார். அவேஷ் கான் களமிறங்கிய நிலையில், ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது, பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 60 பந்துகளில் 107 ரன்கள் அடித்திருந்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை ராஜஸ்தான் வீழ்த்தியது. கொல்கத்தா தரப்பில் ரானா, நரைன், வருண் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
நடப்பு சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அந்த அணி லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்து குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்தது.
இந்த இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் வெற்றியை ருசித்தன. ஆதாலால், அதே உத்வேகத்துடன் களமாடுவார்கள். சொந்த மைதானத்தில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“