Advertisment

KKR vs SRH Highlights: இறுதிவரை திக்..திக் : 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
kkr vs srh live score ipl 2024 match 03 kolkata knight riders vs sunrisers hyderabad scorecard updates eden gardens Tamil News

ஐ.பி.எல். 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

KKR vs SRH | Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது. மே 26 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs SRH Live score, IPL 2024

இந்நிலையில், இந்த தொடரில்  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பதே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடக்க வீரர் சுனில் நரைன், 2 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ரன் கணக்கை தொடங்காமலும், நித்தீஷ் ராணா 9 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 54 ரன்களுக்கு முக்கிய 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். 40 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி 3 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 105 ரன்களுக்கு கொல்கத்தா அணி 5-வது விக்கெட்டை பறிகொடுத்தது.

6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரமன்தீப் சிங் 17 பந்துகளில் 4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ரின்கு சிங் தனது பங்குக்கு 15 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியில் அசத்திய ஆந்த்ரே ரஸல் சிறப்பாப விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிக்கட்டத்தில் சிக்சர்களை பறக்கவிட்ட ரஸல் 25 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 64 ரன்களும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில், நடராஜன் 3 விக்கெட்டுகளும், மார்கண்டி 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

209 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பாக தொடக்கம் கொடுத்தது. இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர் இதனால் 5 ஓவர்களில் ஐதராபாத் அணி 50 ரன்களை கடந்த நிலையில், 60 ரன்களை எட்டியபோது, மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். 21 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மார்க்ரம் 18, சமத் 15 ஆகியோர் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் 145 ரன்களுக்கு ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த க்ளாசன் – ஷபாஸ் அகமது ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

குறிப்பாக ஹென்ரி க்ளாசன் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிய நிலையில், க்ளாசன் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி 2 ஓவர்களில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை என்ற நிலையில், மீச்செல் ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்சருடன் 26 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீசிய ஹர்சித் ரானா முதல் பந்தில் க்ளாசன் சிக்சர் அடித்த நிலையில், 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை எதிர்கொண்ட ஷபாஸ் அகமது சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3- பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் மார்கொ ஜென்சன் ஒரு ரன் எடுக்க 5-வது பந்தில் க்ளாசன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இறுதி பந்தை எதிர்கொண்ட கேப்டன் கம்மின்ஸ் ரன் எடுக்காததால் பரபரப்பான இந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியை பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Srh Vs Kkr IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment