Advertisment

KKR vs SRH Score, IPL 2024 Qualifier 1: ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அதிரடி... இறுதிப் போட்டிக்கு சென்றது கொல்கத்தா!

ஐ.பி.எல். 2024 தொடரில் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
KKR vs SRH LIVE Score IPL 2024 Qualifier 1 match today Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024 (குவாலிஃபையர் 1): கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட இந்தத் தொடரில், ஐ.பி.எல். 2024 தொடரில் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs SRH LIVE Score, IPL 2024 Qualifier 1

நடப்பு ஐ.பி.எல் 2024 தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முதலாவது குவாலிஃபைர் போட்டி, குஜராத், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ராகுல் திரிபாதி பேட்டிங் செய்ய வந்தார். 

அபிஷேக் சர்மா 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வைபவ் அரோமா பந்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில்  ரஹ்மானுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாபாஸ் அஹமது மிட்செல் ஸ்டார்க் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார்.  ஐதராபாத் அணி 5 ஓவர்களில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், மறுமுனையில், ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார், அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், ராகுல் திரிபாதி உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி அரைசதம் அடித்தார். 

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10.6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது, 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த ஹென்ரிச் கிளாசென் வருன் சக்ரவர்த்தி பந்தில் ரின்கு சிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து அப்துல் சமத் பேட்டிங் செய்யவந்தார். 

மறுமுனையில், 35 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்த ராகுல் திரிபாதி ஆண்ட்ரே ரஸ்ஸலால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றினார்.

அடுத்து வந்த சன்விர் சிங், சுனில் நரைன் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது, 12 பந்துகளில் 16 ரன்கள் அடித்திருந்த அப்துல் சமத், ஹர்சித் ரானா பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த புவனேஷ் குமார் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வருண் சக்ரவர்த்தி பந்தில் எல்.பி.டபிள் யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, விஜயகாந்த் வியாஸ்காந்த் பேட்டிங் செய்ய வந்தார். 

கடைசியாக அதிரடியாக விளையாடிய பேட் கம்மின்ஸ் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, 19.3 ஓவரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதன் மூலம், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது.

இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். குர்பாஸ் 23 ரன்களும், சுனில் நரைன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யருடன், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர் இதனிடையே, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் முக்கியமான கேட்ச்களை தவற விட்டனர்.

சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதையடுத்து, எதிர்முனையில், விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யரும் அரை சதம் அடித்தார். 

இறுதியில், இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு சென்றது.

வெங்கடேஷ் அய்யர் 51 (28) ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 58 (24) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 26 ஆம் தேதி) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றுள்ளது. தோல்வியடைந்த அணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 24 ஆம் தேதி) எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். அதாவது, 2வது தகுதிச் சுற்றில் (குவாலிஃபையர் 1) ஆடும். இதில் வெற்றியை ருசிக்கும் அணி  இறுதிப்போட்டிக்குள் 2வது அணியாக நுழையும். 

2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி லீக் சுற்றில் நடந்த 14 ஆட்டங்களில் 9ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது. மறுபுறம், முன்னாள் சாம்பியனான (2016) ஐதராபாத் அணி லீக்கில் 14 ஆட்டங்களில் ஆடி 8ல் வெற்றி பெற்றது. 

இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்ற நிலையில், அந்த அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment