Advertisment

கூர்மையாக ஆதிக்கம் செலுத்தும் கொல்கத்தா... குழப்பமான அதிரடியில் ஐதராபாத்: ஐ.பி.எல் 2024-ல் வாகை சூடப்போவது யார்?

கம்மின்ஸின் அணுகுமுறையை விவரிக்க, ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறந்த உதாரணம். அப்போது இந்தியா அதிக ஆதிக்கம் செலுத்திய அணி, ஆனால், இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தினார்.

author-image
WebDesk
New Update
KKR vs SRH Who will win IPL final 2024 Shreyas Iyer Pat Cummins chepauk pitch conditions Tamil News

இந்த சீசனில் ஐதராபாத் 175 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் கொல்கத்தா 135 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 IPL 2024 | Kolkata Knight Riders | Sunrisers Hyderabad: ஈரப்பதமான காற்று வீசிய சனிக்கிழமை மதியம், ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு முன் போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றனர். பரந்து விரிந்த வங்காள விரிகுடாவை பின்னணியில் கொண்டு, அவர்கள் இருவரும் கட்டுமரம் ஒன்றில் கோப்பையுடன் அமர்ந்தனர். 

Advertisment

மார்ச் 23 அன்று எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல் தொடர் தொடங்கிய நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஐ.பி.எல் தொடங்கிய இடத்துக்குத் திரும்பியுள்ளது. இத்தொடரில் இரண்டு சிறந்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Who will win IPL final 2024: Meticulously dominating Shreyas Iyer’s KKR or chaotically explosive Pat Cummins’s SRH

புதிய கேப்டன் மற்றும் துணை ஊழியர்களின் கீழ், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள், வழக்கமான அனைத்து பாணிகளையும் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, டி20 போட்டியை இப்படித் தான் ஆட வேண்டும் என்கிற பாணியைத் தழுவியுள்ளனர். நடப்பு சீசனில் மிகப் பெரிய மொத்த ஸ்கோர்கள் மிகச் சாதாரணமாக குவிக்கப்பட்டன. ஐதராபாத் அணி குவித்த 6 200-க்கும் மேற்பட்ட மொத்த ஸ்கோர்களில், மூன்று 250-ஐத் தாண்டியது. ஐதராபாத்தைப் போலவே, கொல்கத்தா அணியும் 6 முறை 200-க்கும் அதிகமான மொத்த ஸ்கோர்களை எடுத்தது. ஆடுகளங்கள் மெதுவாகத் தொடங்குவதற்கு முன்பு, அவர்கள் போட்டிகளை சிக்ஸர் பறக்க விடும் போட்டியாக மாற்றினார்கள். இந்த சீசனில் ஐதராபாத் 175 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் கொல்கத்தா 135 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும், அவர்கள் எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு, 2 முறை கோப்பை வென்று கொடுத்த முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வழிகாட்டியாக இருப்பதால், அவர்கள் கூர்மையாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஒழுங்கான உணர்வு இருக்கிறது. ஒரு சீசனில், ஐ.பி.எல் அணிகள் ஆல்-ரவுண்டர்களை குறைவாக நம்பி, அதற்கு பதிலாக ஸ்பெஷலிஸ்ட்களை நம்பியிருந்தாலும், கொல்கத்தா இன்னும் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை நம்பி இருக்கிறது. 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது 2020 இல் மும்பை இந்தியன்ஸ் போல், கொல்கத்தா அணியில் உண்மையான பலவீனம் இல்லை. இரண்டு ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர்கள், அதைத் தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் மிடில்-ஆர்டர், இரண்டு மர்மமான ஸ்பின்னர்கள், வேகப் புயலாக வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் நம்பிக்கையூட்டும் இளம் வீரர்கள் என கோப்பை வெல்லும் அணிக்கே உரித்தான பாணியில் உள்ளனர். 

எதிர்பார்ப்பது என்ன என்பதில் அவர்கள் கணிக்கக்கூடியவர்கள். ஆனால் அதில் தான் அவர்களின் பலம் உள்ளது. அவர்கள் லீக் சுற்று முழுவதும் மூன்று தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (2014) ஆகிய அணிகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிட்ட சகாப்தத்தில் அவ்வாறு செய்த முதல் அணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், துல்லியமான திட்டமிடல் காரணமாக, அதற்கான பதில்களை அவர்கள் பெற்றுள்ளனர். நிலையாக ஆடும் வீரரை கண்டறிய கடினமாக இருக்கும் இந்த ஃபார்மெட்டில், அதுவே அவர்களின் முத்திரையாக இருக்கிறது. ஆடுகள சூழ்நிலைகள் கள் கட்டாயப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் எப்போதாவது தான் ஆடும் லெவனில் மாற்றம் செய்திருக்கிறார்கள்.

மறுபுறம், ஐதராபாத் இங்கு வருவதற்கு குழப்பத்தை தழுவியது. ஏலத்தின் முடிவில், அவர்கள் பேப்பரில் வலுவான அணியாகத் தோன்றினர். ஆனால் அவை அனைத்தும் களத்தில் காண்பிக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது. கடந்த மூன்று சீசன்களில் இரண்டில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரும்பியபடி இது அவர்களுக்கு ஒரு மறுமலர்ச்சியின் ஆண்டாகும். அவரது ஜெயிலர் திரைப்பட வெளியீட்டின் போது, ​​ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்காக அவரது தந்தை கலாநிதி மாறனிடம் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தார். அவர், “கலா சாருக்கு (கலாநிதி மாறன்) எனது ஒரே வேண்டுகோள், சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல வீரர்களைப் பெற வேண்டும் என்பதுதான். சன்ரைசர்ஸ் போட்டியின் போது காவ்யாவின் உணர்ச்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது பி.பி (இரத்த அழுத்தம்) அதிகரிக்கிறது, ”என்று ரஜினிகாந்த் கூறினார். ஏலத்தில் பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை வாங்கிய பிறகு, அவர்கள் முற்றிலும் மாறுபட்ட அணியாகத் தோன்றினர்.

அவர்கள் கணிக்க முடியாதவர்களாக இருந்தனர். ஆனால் எப்படியோ, அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவுக்கு சாம்பியன் பட்டத்துக்கு சவால் விடும் தகுதியான எதிரணியாகத் தங்களை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

இறுதிப் போட்டிக்கான அவர்களின் பாதைகள் மாறுபட்டவை. ஆனால் பொதுவான கூறுகளும் உள்ளன. இரு அணிகளும் பேட்டிங்கில் அதிரடி காட்டவும், பவுலிங்கை இரண்டாவதாக வைத்தும் ஆட்டங்களை வெல்ல தயாராகினர். ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகள் காலாவதியான கருத்துகளாகக் கருதப்பட்டு தற்போது ஸ்ட்ரைக்-ரேட் மற்றும் டாட்-பால்கள் முன்னுரிமை பெறுகின்றன. இவை இரண்டு சமமாகப் பொருந்திய பக்கங்களாகும். சுதந்திரத்துடன் விளையாடுவது, கூரையை உடைக்கும் ஷாட்டுகளை ஆடுவது என முக்கியத்துவம் அளித்துள்ளார்கள்.  அதனால், போட்டிக்கு முன்னதாக, ஸ்ரேயாஸ் அல்லது கம்மின்ஸ் ஆகிய இருவரும் தங்கள் பாணியை மாற்றுவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை, அது தான் அவர்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் சிவப்பு மண் ஆடுகளத்தில் களமாட உள்ளார்கள். இந்த ஆடுகளம்  நல்ல பவுன்ஸ் மற்றும் வேகத்தை வழங்குகிறது.  சென்னையில் மழை வாய்ப்பு இருக்கும் நிலையில், பனி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. குவாலிஃபையர் 2-இல் இருந்ததைப் போல பிட்ச் மாறினால், இரு அணிகளிலும் பின்வாங்குவதற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதில், கொல்கத்தா விளிம்பில் உள்ளது. 

ஆனால், ஸ்ரேயாஸ் சொன்னது போல், எல்லாமே மனப்போக்கில் வந்துவிடும். ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு, கம்மின்ஸ் ஐ.பி.எல்-லில் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஃபார்மெட்டில் அணியை வழிநடத்துவதில் அனுபவம் இல்லாது இருப்பது  அவ்வளவு முக்கியமல்ல என்பதை அவர் இப்போது காட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் இந்திய சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றார். 

கம்மின்ஸின் அணுகுமுறையை விவரிக்க, ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறந்த உதாரணம். அப்போது இந்தியா அதிக ஆதிக்கம் செலுத்திய அணி, ஆனால், இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தினார். இந்த ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அதேபோன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களைத் தடுக்கும் ஒரே அணியாக கம்மின்ஸின் ஐதராபாத் உள்ளது. ஆஸ்திரேலியாவைப் போலவே, ஐதராபாத் அணியும் அதிரடியான முடிவுகளை எடுக்கிறது. தக்க சமயத்தில் சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுகிறது. அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அகமதாபாத்திற்குப் பிறகு, கம்மின்ஸ் ஒரு இந்திய கேப்டனை வீழ்த்துவதற்கான மற்றொரு வாய்ப்பைப் பெறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment