KL Rahul – Athiya Shetty Wedding Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். இவர் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார். இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான விளையாடி வரும் நிலையில், இத்தொடரில் இருந்து ராகுல் சொந்த காரணங்களுக்காக விலகி இருந்தார். இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கு நாளை திருமணம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகி உள்ளன. கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் இன்று நடக்கிறது. இதற்கான மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் நேற்று நடந்தது.
இதனைத்தொடர்ந்து, மலைவாசஸ்தலமான மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி,
இந்நிலையில், லோகேஷ் ராகுல் – அதியா ஷெட்டி திருமணத்தை ஒட்டி நேற்று ‘சங்கீத இரவு’ நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இதில், பிரபல இந்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டது. அதற்கு விருந்தினர்கள் நடமாடி மகிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Athiya Shetty's moves on Meri Umar Ke Nojawano 💃😍#KLRahul #AthiyaShetty #SunielShetty #KLRahulAthiyaShettyWedding pic.twitter.com/kUihj5izF3
— First India filmy (@firstindiafilmy) January 23, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil