India-vs-australia | kl-rahul | indian-cricket-team: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பிற்பகல் 1:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவிற்கான கடைசி ஒத்திகையாக இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கே.எல் ராகுல் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பினார். அவர் இதுவரை ஒரு கேப்டனாக இந்திய அணியை 7 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி, நான்கில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளார்.
இருப்பினும், கேப்டனாக அவரது முந்தைய பணிகள் அனைத்தும் அயல்நாட்டு மண்ணில் போட்டிகளில் இருந்ததால், இது இந்தியாவில் கேப்டனாக அவரது முதல் ஒருநாள் போட்டியாகும். 2022 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை வழிநடத்தும் வாய்ப்பை ராகுல் பெற்றார். இது துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு 0-3 என்ற கணக்கில் தோல்வியை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/post_attachments/mW9j1YQlnnRMdwbqT8yl.jpg)
எனினும், அவர் மீண்டு வந்து, ஜிம்பாப்வேக்கு எதிராக அணியை உறுதியான வெற்றிக்கு அழைத்துச் சென்று, தொடரை 3-0 என வென்றார். மேலும், சட்டோகிராமில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவை மற்றொரு வெற்றிக்கு வழிநடத்தினார். கேப்டனாக தனது நான்காவது வெற்றியைப் பெற்றார்.
19.16 சராசரியில் 115 ரன்கள் மற்றும் ஒரே ஒரு அரை சதம் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 55) என்ற நிலையில், கேப்டனாக ராகுலின் பேட்டிங் செயல்திறன் குறைவாகவே உள்ளது. வரவிருக்கும் தொடரில் இந்த சாதனையை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் 58 ஒருநாள் போட்டிகளில் 46.84 சராசரியில் 2155 ரன்கள் குவித்துள்ளார். இதில் 55 இன்னிங்ஸில் 6 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/dpv6Kujq1ezJH6y46Hxw.jpg)
சுவாரசியமாக, ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 43.55 சராசரியுடன் 392 ரன்கள் எடுத்திருக்கிறார். 3 அரை சதங்களையும் விளாசியுள்ளார். கூடுதலாக, அவர் சொந்த மண்ணில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் பெற்றுள்ளார், 20 இன்னிங்ஸ்களில் 49 சராசரியுடன் 833 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.
இந்த தொடரில் ராகுல் இந்திய கேப்டனாக முத்திரை பதிக்க அனைத்து நல்ல அறிகுறிகளும் உள்ளன. சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை (111*) அடித்த ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது அதே ஃபார்மைத் தொடர்வார் என்றும், அடுத்த மாதம் அதிகம் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பையிலலும் சிறப்பாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“