IPL 2025: ஆர்.சி.பி அணியில் இணைகிறாரா கே.எல். ராகுல்? எல்.எஸ்.ஜி ஸ்டார் பேட்டர் அளித்த பதில் வைரல்

IPL 2025: கே.எல். ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்காக 2013 மற்றும் 2016-க்கு இடையில் 4 ஐ.பி.எல் சீசன்களில் விளையாடியுள்ளார்.

IPL 2025: கே.எல். ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்காக 2013 மற்றும் 2016-க்கு இடையில் 4 ஐ.பி.எல் சீசன்களில் விளையாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
KL Rahul 1

IPL 2025: கே.எல். ராகுல்

IPL 2025, KL Rahul: இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2024 போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் கே.எல்.ராகுல் பேசியது, அவர் அணியில் தொடர்வரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கே.எல். ராகுல் தனது குடும்பத்தின் ஒரு அங்கம் என்று எல்.எஸ்.ஜி உரிமையாளர் கோயங்கா சமீபத்தில் கூறியிருந்தாலும், அந்த அணியில் இருந்து அவர் வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது என்ற செய்திகள் வெளியானது. 

Advertisment

குறிப்பாக அடுத்த ஐ.பி.எல் சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் கே.எல். ராகுல் ஆர்.சி.பி அணியில் இணைய வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியானது. 

உண்மையில், ஆர்.சி.பி அணி கே.எல். ராகுலுக்கு ஒன்றும் புதிய அணி அல்ல. அவர் ஆர்.சி.பி-க்காக 2013 மற்றும் 2016-க்கு இடையில் 4 ஐ.பி.எல் சீசன்களில் விளையாடியுள்ளார்.

சமீபத்தில், கே.எல். ராகுல் ஒரு ஆர்.சி.பி ரசிகருடன் உரையாடிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில், கேள்வி கேட்கும் ரசிகரிடம் கே.எல். ராகுல், தனது முன்னாள் அணியுடன் தன்னை இணைத்துப் பேசப்படும் வதந்திகள் குறித்து தனக்கு தெரியும் என ஒப்புக்கொள்கிறார்.

Advertisment
Advertisements

அதுமட்டுமல்ல, ரசிகரின் கேள்விக்கு,  “அப்படியே நம்புவோம்” என்று கே.எல். ராகுல் கூறுவதை வீடியோவில் கேட்க முடிகிறது.

கடந்த மாதம், ஜகீர் கான் எல்.எஸ்.ஜி அணியின் வழிகாட்டியாக அறிவிக்கப்பட்டபோது, கே.எல். ​​ராகுலுடனான தனது பிணைப்பை கோயங்கா வெளிப்படுத்தினார்.

“பாருங்கள், கடந்த மூன்று வருடங்களாக நான் கே.எல். ராகுலை தவறாமல் சந்தித்து வருகிறேன். இந்த சந்திப்பு இந்த அளவுக்கு கவனத்தை ஈர்த்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் கூறியது போல் தக்கவைப்பு விதிகள் வெளியாகும் வரை நாங்கள் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை” என்று கோயங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஆனால் கே.எல். ராகுல் ஆரம்பத்திலிருந்தே எல்.எஸ்.ஜி குடும்பத்தின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். அவர் மிக முக்கியமான இடத்தில் விளையாடியுள்ளார். அவர் எல்.எஸ்.ஜி குடும்பத்தைப் போன்றவர், எல்.எஸ்.ஜி குடும்பமாக இருப்பார்” என்று கோயங்கா கூறினார்.

“செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதை முடிவு செய்ய வேண்டும். கொள்கைகள் வெளிவரட்டும். அணி முன்னோக்கி செல்வது பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லை, தக்கவைப்பு மூன்று-நான்கு-ஐந்து அல்லது ஆறாக இருக்குமா, எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை” என்று கோயங்கா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kl Rahul

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: