Sai Sudharsan | Kl Rahul | India Vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்த நிலையில், தொடரைக் கைப்பற்ற போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
அபார வெற்றி
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 108 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 297 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
கேப்டன் ராகுல் பெருந்தன்மை - சாய் சுதர்சன் நெகிழ்ச்சி
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களமாடி வரும் அவர் இரண்டு அரைசதங்களுடன் 127 ரன்களை (55, 62,10) எடுத்து சிறப்பாக இருந்தார். தொடர்ந்து அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைப் போட்டியில் சாய் சுதர்சன் புலி போல் பயந்து கேட்ச் பிடித்து மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை 32.2 வது ஓவரில் அவேஷ் கான் கைப்பற்றி அசத்தி இருந்தார். அவர் கொடுத்த கேட்ச்சை சாய் சுதர்சன் ஒரு அற்புதமான டைவ் போட்டு பிடித்து மிரட்டினார். அவரது இந்த அசத்தலான கேட்ச் பற்றி அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பி.சி.சிஐ உலகக் கோப்பை தொடர் முதல் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றார்.
/indian-express-tamil/media/post_attachments/4bbe6d83-a24.jpg)
நேற்றைப் போட்டியில் கேப்டன் கே.எல் ராகுல் 6 பிடித்து அசத்தி இருந்தார். எனினும், சாய் சுதர்சன் அபாரமாக கேட்ச் பிடித்து மிரட்டி இருந்த நிலையில், 'இம்பேக்ட் பீல்டர்' விருதை சாய் சுதர்சனுக்கு வழங்க வேண்டும் என அணி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். அதன்படி, சிறப்பாக பீல்டருக்கான பதக்கம் சாய் சுதர்சனுக்கு அணிவிக்கப்பட்டது. அணியின் பயிற்சியாளர்கள், மற்ற வீரர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“