Anushka Sharma and Virat Kohli holidaying in Dubai Tamil News: விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்தியாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகள் வாமிகாவை அவர்கள் வரவேற்றனர்.
பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா, ‘ரப் நே பனா தி ஜோடி’, ‘பிகே’, ‘பேண்ட் பாஜா பாராத்’, ‘சுல்தான்’ மற்றும் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்காக புகழ் பெற்றவர். அவர் கடைசியாக ஷாருக்கான் மற்றும் கத்ரீனாவுடன் 2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தனது சகோதரர் கர்னேஷ் ஷர்மா தயாரித்த நெட்ஃபிக்ஸ் படமான காலாவில் (Qala) சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், கோடே பே சவார் பாடலிலும் அவர் தோன்றி இருந்தார்.

2021ல் மகள் வாமிகா பிறந்த பிறகு அனுஷ்கா, ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்திற்கான ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
துபாயில் புத்தாண்டை கொண்டாடும் கோலி – அனுஷ்கா ஜோடி… வைரல் புகைப்படம்
சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் கோலி – அனுஷ்கா ஜோடி தங்களின் புகைப்படங்கள் மற்றும் அவ்வப்போது எடுக்கும் போட்டோஷூட் படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் துபாயில் எடுத்த புகைப்படங்களை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதேபோல் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா இருக்கும் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விராட் கோலி.
துபாயில் விராட்டும் அனுஷ்காவும் தங்களுடைய ஹோட்டலில் உள்ள ஒரு குளத்தின் அருகே நின்றுகொண்டு, சூரிய உதயத்தைப் பார்த்தபடி நிற்கின்றனர். அனுஷ்கா அவர்கள் அருகில் நிற்க, விராட் வாமிகாவை தன் கைகளில் தூக்கி வைத்துள்ளார். குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்த விராட், “2022-ன் கடைசி சூரிய உதயம்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதேபோல், அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அவரும் கணவர் கோலியும் உள்ளனர். அவர்களின் பின்புறம் துபாயின் பிரபல கட்டிடமான புர்ஜ் கலீஃபா இருக்கிறது. “இந்த நகரம், நாங்கள், கடந்த இரவு (This city, us, last nigh)” என்று அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் துபாயில் எடுத்த புகைப்படங்கள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil