தன் வாழ்க்கையில் விராட் கோலி என்றும் மறக்காத 10 சம்பவங்களுள் இந்த தரமான சம்பவத்திற்கு நிச்சயம் இடமுண்டு.
ஏப்ரல் 12, 2012 இதே நாள் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
தோனி, கோலியை டார்கெட் செய்கிறாரா கம்பீர்? அந்த சண்டை தான் காரணமோ?
இதில், பெங்களூரு நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை, படாதபாடுபட்டு துரத்திக் கொண்டிருந்தது சிஎஸ்கே. தோனி 41 ரன்களில் அவுட்டாக, தனி ஆளாக போராடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 71 ரன்களில் முரளிதரன் ஓவரில் வெளியேறினார்.
கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் 75.
இறுதிக் கட்டத்தில் பிராவோ-வுடன் ஆல்பி மார்கல் ஜோடி சேர்ந்தார்.
12 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்ட போது, சென்னை அணி அவ்வளவு தான் என்றே முடிவு கட்டப்பட்டது.
அப்போது, பந்து வீச வெட்டோரி கோலியை அழைத்தார். அந்த அற்புதம் நிகழ்ந்தது.
மேட்ச் அல்மோஸ்ட் நம் கையில் என்ற தவறான முடிவுக்கு வெட்டோரி வந்தார், 28 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. சரமாரியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஆல்பி மோர்கல்.
இதனால் தேவைப்படும் ரன் விகிதம் குறைய, வினய் குமாரின் மிக மிக சுமாரான ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்றது சிஎஸ்கே.
என்னா அடி!! ச்சை!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”