Advertisment

டிராவிட்டின் மெகா சாதனையை நெருங்கும் விராட் கோலி: ஆஸி. தொடரில் இது சாத்தியமா?

Virat kohli to surpass legendary batter and current India head coach Rahul Dravid’s tally Tamil News: கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
Kohli likely to Surpass Dravid's Massive Tally in Upcoming IND vs AUS Series

Virat kohli - Rahul Dravid

Australia tour of India, 2022 - Virat kohli - Rahul Dravid  Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

டிராவிட்டின் மெகா சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி 207 ரன்கள் எடுப்பதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையை படைக்கலாம். இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் விளையாடிய விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி தனது தற்காலிக ஃபார்ம் அவுட்டை மீட்டெடுத்தார். இந்த ஆட்டத்தில் 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், 33 வயதான அவர் ஐந்து போட்டிகளில் 276 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்களை எடுத்தவராக இருந்தார். அதே ஃபார்மை கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தொடரும் பட்சத்தில், இது போன்ற எண்ணற்ற சாதனைகளை அவர் படைக்கலாம்.

publive-image

இந்திய அணிக்காக கோலி 102 டெஸ்ட் போட்டிகளில் 8074 ரன்களும், 262 ஒருநாள் போட்டிகளில் 12344 ரன்களும், 104 டி20 போட்டிகளில் விளையாடி 3584 ரன்களும் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, அவர் 468 போட்டிகளில் விளையாடி 522 இன்னிங்ஸ்களில் 53.81 சராசரியுடன் 24,002 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேசமயம், டிராவிட் 605 இன்னிங்ஸ்களில் 45.41 சராசரியுடன் 24,208 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 48 சதங்கள் மற்றும் 146 அரை சதங்களை அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள இந்தியா ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், 664 போட்டிகளில் 48.52 சராசரியில் 34,357 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்கிற அளப்பரிய சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sachin Tendulkar Virat Kohli India Vs Australia Sports Cricket Indian Cricket Team Indian Cricket Captain Virat Kholi Rahul Dravid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment