யாரப்பா அது? பருப்பு சோறுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இந்திய வீரர்... போட்டு உடைத்த கோலி!
Virat Kohli revealed unknown trivia regarding one of his teammates Tamil News: கோலி மிகவும் வினோதமான உணவுப் பழக்கத்தைக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரரின் பெயரைத் தெரிவித்துள்ளது ரசிர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
Virat Kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய அவர், அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று மும்மையில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களுடன் இணைந்து கோலியும் பயணிக்கிறார்.
Advertisment
இதற்கிடையில், விராட் கோலி மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவான கௌரி குஞ்சை ஹோட்டலாக மாற்றி வருகிறார். இது தொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளர் மனீஷ் பாலுடன் இணைந்து தனது ஹோட்டலை அவர் சுற்றிக் காண்பித்துள்ளார். அந்த வீடியோ தற்போது ஒன்8 கம்யூன் யூடியூப் பக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரட்ட கோலி இந்திய வீரர் ஒருவரின் வித்தியாசமான உணவுப் பழக்கம் குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது போன்ற டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கோலி மிகவும் வினோதமான உணவுப் பழக்கங்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரரின் பெயரைத் தெரிவித்துள்ளது ரசிர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஒன்8 கம்யூன் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவில் கோலி, "சாப்பிடும் போது யாராவது ஒரு தனித்துவமான கலவையை முயற்சிப்பதை நான் பார்த்திருந்தால், அது விருத்திமான் சாஹா தான். நான் ஒருமுறை அவரது தட்டில் பட்டர் சிக்கன், ரொட்டி, சாலட் மற்றும் ரஸ்குல்லா வைத்திருந்ததைக் கவனித்தேன்.
பின்னர், அவர் இரண்டு மூன்று ரொட்டி மற்றும் சாலட்டை எடுத்து முழு ரசகுல்லாவையும் அதில் வைத்து சாப்பிடுவதை நான் பார்த்தேன். அதனால் நான் அவரிடம் ‘விருத்தி என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன்.
அவர் வழக்கமாக இப்படித்தான் சாப்பிடுவார் என்று என்னிடம் கூறினார். அவர் சில சமயங்களில் பருப்பு சோறுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவார். இரண்டு கை பருப்பு சோறு என்றால், ஒரு கடி ஐஸ்கிரீம் என சாப்பிடுவார்.
இந்த படைப்பாற்றலை வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்று நான் நினைப்பதுண்டு" என்று அவர் கூறியுள்ளார்.