IPL 2024 | Kolkata Knight Riders: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இறுதிப் போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) பேட் கம்மின்ஸின் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை (எஸ்.ஆர்.எச்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR wins IPL 2024: Kolkata Knight Riders’ journey in IPL history
இதற்கு முன்பு கொல்கத்தா அணி, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது ஷ்ரேயாஸ் தலைமையிலான அணிக்கு ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் தான் அப்போதைய கொல்கத்தாவின் கேப்டனாக இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரமான கம்பீர், 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். மேலும் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கே.கே.ஆரை அடுத்தடுத்து 2 முறை ஐ.பி.எல் பட்டம் வெல்ல அழைத்துச் சென்றார். நடப்பு சீசனின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நைட்ஸ் வீழ்த்தியதன் மூலம் அவர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றியுள்ளார்.
கொல்கத்தா அணி ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 3-வது முறையாக கோப்பையை முத்தமிட்டுள்ளது. 2021-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸிடம் கோப்பையை பறிகொடுத்தது. நடப்பு சீசன் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 9 வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும், முதல் அணியாக இறுதிப் போட்டிக்கும் முன்னேறி பெரும் சாதனை படைத்தது கொல்கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் வரலாற்றில் கொல்கத்தாவின் பயணம்:
ஆண்டு - நிலை
2008 - 8 அணி / 6வது இடம்
2009 - 8 அணி / 8வது இடம்
2010 - 8 அணி / 6வது இடம்
2011 - 10 அணி / 4வது (பிளேஆஃப்ஸ்) இடம்
2012 - சாம்பியன்
2013 9 அணி / 7வது இடம்
2014 சாம்பியன்
2015 8 அணி / 5வது இடம்
2016 8 அணி / 4வது (பிளேஆஃப்) இடம்
2017 8 அணி / 3வது (பிளேஆஃப்) இடம்
2018 8 அணி / 3வது (பிளேஆஃப்) இடம்
2019 8 அணி / 5வது இடம்
2020 8 அணி / 5வது இடம்
2021 8 அணி / இரண்டாம் இடம்
2022 10அணி / 7வது இடம்
2023 10 அணி / 7வது இடம்
2024 சாம்பியன் இடம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“