மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயார்படுத்தும் வகையில் பாரா விளையாட்டு சங்கத்துடன் பேம் கிளப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
கோவை ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பகுதியில் ஃபேம் க்ளப் எனும் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகின்றது.
இந்த மையத்தில் இயன்முறை பயிற்சி உடல்நல கட்டமைப்பு மறுவாழ்வு மற்றும் விளையாட்டு பயிற்சிகளை, அளித்து வருகின்றது.

மேலும் ஒரு பகுதியாக மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்களுக்காக பயிற்சி அளிப்பதற்காக பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இவர்களை பங்கேற்க தயார்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் முன்னிலையில் பேம் க்ளப் ஆலோசகர் முருகபிரபு, கோவை மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ஷர்மிளா ஆனந்த் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்பந்தங்களை மாற்றிக் கொண்டனர்.

மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஃபேம் க்ளப், கோவையில் செயல்பட்டு வருகின்றது, தற்பொழுது முதன்முறையாக தமிழகத்தில் இலவசமாக இயன் முறை சிகிச்சை, மறுவாழ்வு,மற்றும் விளையாட்டு பயிற்சியை மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு அளிக்க முன்வந்துள்ளது எனவும் இத்றகாக 35 மாற்று திறனாளிகளுக்கு, வீழ்சேரில் அமரும் வகையில் நடத்தப்படுகின்ற கூடை பந்து, கைப்பந்து, ஈட்டி எறிதல், போன்ற விளையாட்டு பயிற்சிகளுக்கு இவர்களை தயார்படுத்த முன் வந்துள்ளதாக பேம் க்ளப் ஆலோசகர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளரான முருகப் பிரபு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்