கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந்தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யாவட்டத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/edd678f5-fa0.jpg)
இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா - தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் சப் ஜூனியர், பெண்கள் ஜூனியர், பெண்கள் எலைட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழகம் சார்பாக கோவையை சேர்ந்த மாணவி ஹஷினி கலந்து கொண்டு கெரின், ஸ்பிரின்ட ஆகிய பிரிவில் தலா ஒரு தங்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவில் தலா ஒரு வெள்ளியும் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“