கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/39346eff-1fb.jpg)
இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஆறாவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீர்ர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/ae96a06e-eea.jpg)
இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
/indian-express-tamil/media/post_attachments/e2a4435a-33b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/c8296d1e-26e.jpg)
4 வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்ட இதில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அசத்தலாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/d6c5aa73-637.jpg)
இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்து கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை