கோவையில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் கலர் பெல்ட் தேர்வு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே மற்றும் சிலம்பத்தை தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். அதே போல சிலம்பம் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடும் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அனைவரிடத்திலும் இந்த தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் கராத்தே மற்றும் சிலம்பம் கலர் பெல்ட் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இதில் கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கராத்தே தேர்வில், கட்டா மற்றும் பஞ்ச், கிக் எனவும் சிலம்பத்தில் வீடு கட்டுதல், சுத்து வரிசை, அலங்கார பாடம் என் தங்களின் வலிமை நிறைந்த தனித்திறமைகளை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்பு அசத்தினர்.
கலர் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளின் அடிப்படையில் மஞ்சள், ஆரஞ்சு, கிரீன், ப்ளூ பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“