/indian-express-tamil/media/media_files/OItUZCIWUEhfSgXPsSmA.jpeg)
கோவையில் நடைபெற்ற சிலம்பகலை தேர்வில் பல்வேறு வகையான சிலம்ப கலைகளை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கலர் பட்டயம் வழங்கப்பட்டது.
தமிழர் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை தற்போது பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்நிலையில்,சிலம்ப கலையில் முறையாக பயிற்சிகளை வழங்கி வரும், முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையம் தனது ஒன்பதாவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது.
இதில் நான்கு வயது முதல் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாங்கள் கற்ற கலையை செயல்முறையோடு செய்து காண்பித்தனர்.
இதில் சிலம்பத்தில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, மான் கொம்பு, வேல் கம்பு, அலங்கார சிலம்பம், தீ சிலம்பம், வாள் வீச்சு, சுருள் வாள், போர் சிலம்பம், குத்து வரிசை உள்ளிட்ட பயிற்சிகளை வகுப்பு வாரியாக நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு,
ஊதா,பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,கருப்பு போன்ற பட்டயங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இது குறித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது
சிலம்பம் கற்பதால் கல்வி,விளையாட்டு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் மேலும் பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் ஒரு தற்காப்பு கலையாக இருப்பதாக இவ்வாறு தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.