தற்காப்பு கலையின் பாரம்பரிய ஆயுதமான நிஞ்சா கட்டையை பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/0a6bcc0b-36d.jpg)
கோவையில் பாரம்பரிய தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தற்காப்பு கலை பயிற்சிகளை பெற்று வரும் மாணவர்கள் இணைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/8c1477f3-21f.jpg)
அதன்படி "தி கோல்டன் ஸ்டார்ஸ்” அகாடமியில் பயிற்சி பெற்று வரும் நான்கு வயது மாணவர்கள் துவங்கி கல்லூரி செல்பவர்கள் வரை 118 மாணவர்கள் இணைந்து தற்காப்பு கலையின் பாரம்பரிய ஆயுதமான நிஞ்சாக் கட்டையை தொடர்ந்து ஒரு மணி நேரம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/fe6fed0f-e21.jpg)
குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சாதனை கோவை தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி.சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சாதனை செய்த மாணவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் சதீஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
பி.ரஹ்மான், கோவை