கே.மணி நினைவு முதல் மாநில சிலம்பம் கோப்பை-2024 என்றமாநில அளவிலான சிலம்ப போட்டி கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
எம். ஆறுமுகம் தேகப் பயிற்சி சாலை நடத்திய இந்த போட்டியில் கோவை, ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் இருந்து 600"க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 5 வயது முதல் 50 வயது வரை போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த சிலம்ப போட்டியில் 98 புள்ளிகள் பெற்று கோவை மாவட்ட வீரதமிழன் சிலம்பாட்டம் கூடம் முதல் இடம் பெற்றது.
டி1 போலீஸ் பாய்ஸ் கிளப் 75 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றது. யோர்கர் அணி மூன்றாம் இடமும்,ஸ்ரீ விவேக சிலம்பகம் நான்காம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியளர் சௌந்தர்ராஜன், நந்தகுமார், பொன்னுசாமி, பழனிசாமி பயில்வான், பிரதீப் குமார், ஆசான்கள் கந்தசாமி, சந்திரன், குணசேகரன் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை