இரண்டாவது ஹாட்ரிக் கைப்பற்றிய முதல் இந்தியன்! – அந்த மூணாவது விக்கெட்டை கோலியே எதிர்பார்க்கல (வீடியோ)

Kuldeep Yadav Hat trick: விசாகப்பட்டினத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சர்சதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் வீசிய போட்டியின் 33ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஷேய் ஹோப், விராட் கோலியின் சூப்பர் கேட்ச்சால் அவுட்டானார். அடுத்த பந்தில் ஜேசன் ஹோல்டர் வெளியேறினார். ஹாட்ரிக் […]

kuldeep yadav second hat trick ind vs wi 2nd odi full video - இரண்டாவது ஹாட்ரிக் கைப்பற்றிய முதல் இந்தியன் - அந்த மூணாவது விக்கெட் செம (வீடியோ)
kuldeep yadav second hat trick ind vs wi 2nd odi full video – இரண்டாவது ஹாட்ரிக் கைப்பற்றிய முதல் இந்தியன் – அந்த மூணாவது விக்கெட் செம (வீடியோ)

Kuldeep Yadav Hat trick: விசாகப்பட்டினத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சர்சதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

இவர் வீசிய போட்டியின் 33ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஷேய் ஹோப், விராட் கோலியின் சூப்பர் கேட்ச்சால் அவுட்டானார். அடுத்த பந்தில் ஜேசன் ஹோல்டர் வெளியேறினார். ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்ட அல்ஜாரி ஜோசப், கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக சர்வதேச ஒருநாள் அரங்கில் குல்தீப் யாதவ் தனது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் குல்தீப்.


இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முறைக்கு மேல் ஹாட்ரிக் கைப்பற்றும் ஆறாவது பவுலர் என்ற பெருமையை குல்தீப் பெற்றார். இலங்கையின் மலிங்கா, மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஸ்டக், சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் தலா 2 முறை ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

குல்தீப் கைப்பற்றிய ஹாட்ரிக் விக்கெட்டை காண இங்கே க்ளிக் செய்யவும்

தவிர, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய நான்காவது இந்தியர் என்ற பெருமையையும் குல்தீப் பெற்றார். மேலும், இரண்டு முறை இச்சாதனையை சாதனை படைத்த ஒரே இந்தியரும் குல்தீப் தான். முன்னதாக சேட்டன் ஷர்மா (நியூசி.,க்கு எதிராக 1987) கபில் தேவ் (இலங்கைக்கு எதிராக 1991), முகம்மது ஷமி (ஆப்கனுக்கு எதிராக 2019) ஆகியோர் இச்சாதனையை படைத்தனர்.

குல்தீப் யாதவ் கடந்த 2017ல் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். தற்போது இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kuldeep yadav second hat trick ind vs wi 2nd odi full video

Next Story
IPL 2020 Auction: அதிக தொகைக்கு விலை போன பேட் கம்மின்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸின் ராஜதந்திரம்VIVO IPL  2020 Player Biddings Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express