ரிங்கு சிங் கன்னத்தில் அறை விட்ட குல்தீப்; கொதிக்கும் ரசிகர்கள்: வீடியோ போட்டு கொல்கத்தா விளக்கம்

நேற்றைய (ஏப்ரல் 29) தினம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு பின்னர் ரிங்கு சிங்கை, குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தா அணி சார்பாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிடப்படுட்டுள்ளது.

நேற்றைய (ஏப்ரல் 29) தினம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு பின்னர் ரிங்கு சிங்கை, குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தா அணி சார்பாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிடப்படுட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kuldeep and rinku

நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு பின்னர், ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் இருமுறை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Kuldeep Yadav slaps Rinku Singh ‘twice’ after IPL clash; KKR responds with ‘Gehri Dosti’ video amid social media outrage

நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில், நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, அர்ஜூன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்ததும் இரு அணி வீரர்களும் களத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரிங்கு சிங்கை, குல்தீப் யாதவ் இரண்டு முறை கன்னத்தில் அறைந்தார். இச்செயலால், ரிங்கு சிங் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

Advertisment
Advertisements

குறிப்பாக, குல்தீப் யாதவின் இச்செயல் நட்பு ரீதியாக நடந்ததா அல்லது வேறு வகையில் கண்டனத்திற்குரிய விதமாக அமைந்ததா என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், இச்செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. குறிப்பாக, இருவருக்கும் இடையே இருக்கும் நட்பை எடுத்துக் காட்டும் விதமாக அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இரு நண்பர்களிடையே விளையாட்டாக அரங்கேறியது என்று கொல்கத்தா அணி தரப்பில் விளக்கம் அளித்துள்ள போதிலும், பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இச்செயல் கண்டனத்திற்குரியது என்று கூறும் ரசிகர்கள், குல்தீப் யாதம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: