பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது, கவனச்சிதறல்களைக் குறைக்க, தனது பயிற்சியாளர் பிரகாஷ் படுகோன், தனது மொபைல் போனை வாங்கி வைத்துக்கொண்டதாக பிரதமர் மோடியிடம் லக்ஷியா சென் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Lakshya Sen on Paris Olympics: ‘Prakash sir took away my phone… said won’t get back till matches are done’
லக்ஷியா சென்னிடம், “நீங்கள் இப்போது பிரபலமாகிவிட்டீர்கள் தெரியுமா?” என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.
லக்ஷியா முகத்தில் புன்னகையுடன், “பிரகாஷ் சார் என் ஃபோனை எடுத்துக் கொண்டார்.... போட்டி முடியும் வரை திரும்ப தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்” என்று பதிலளித்தார்.
இதற்கு பிரதமர் மோடி, “பிரகாஷ் சார் இவ்வளவு கண்டிப்பானவராக இருந்தால், அடுத்த முறையும் அவரையே அனுப்புவேன்” என்று பதிலளித்துள்ளார்.
தனது வெண்கலப் பதக்கத்தை ப்ளேஆஃப் இழப்பதற்கு ஒரு ஆரம்ப அனுகூலத்தை வீணடித்த லக்ஷ்யா சென், இது தனக்கு மனவேதனையை ஏற்படுத்துவதாகவும், இந்த அனுபவத்திலிருந்து அவர் கற்றுக் கொள்வதாகவும் ஒப்புக்கொண்டார்.
“இது எனக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது. நான் பதக்கம் வெல்வதற்கு மிக அருகில் இருந்தது மனவேதனையாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
பாரீஸில் இந்தியா முதன்முறையாக இரட்டை இலக்க பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ரு 6 பதக்கங்களை மட்டுமே பெற்றது. மேலும், முந்தைய ஒலிம்பிக் போட்டியில் பெற்ற சாதனையுடன்கூட பொருந்தவில்லை.
ஆனால், லக்ஷியா சென்னின் பயிற்சியாளரும், பேட்மிண்டன் ஜாம்பவானுமான பிரகாஷ் படுகோன், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர்கள் தாங்கள் தீவிரமாக செயல்படுகிறார்களா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
“அனேகமாக, உங்களுக்குத் தெரியும், வீரர்கள் போதுமான அளவு கடினமாக உழைக்கவில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் மட்டும் போதாது. எனவே நீங்களும் (வீரர்கள்) உழைக்க வேண்டும்” என்று பாரிஸில் செய்தியாளர்களிடம் படுகோன் கூறியிருந்தார்.
“வெற்றி பெறுவதற்கான அவர்களின் தாகத்தைப் பாதிக்கும் அளவுக்கு வீரர்கள் செல்லம் காட்டப்படுகிறதா என்று கேட்டபோது பிரகாஷ் படுகோன் பதிலளித்தார்: “அனேகமாக, ஓரளவு இருக்கலாம். அதுவும் (செல்லம்) தேவை. வீரர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்… நீங்கள் சில விஷயங்களைக் கேட்கும்போது, அவர்களும் வழங்க வேண்டும். அவர்கள் வழங்கவில்லை என்றால், நீங்கள் கொஞ்சம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அனேகமாக கூட்டமைப்பு அல்லது அரசாங்கமாக இருக்கலாம். வெளிப்படையாக இருப்போம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“