/tamil-ie/media/media_files/uploads/2023/05/Malinag.jpg)
லிசித் மலிங்கா
உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு எப்போதும் மறக்காது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மலிங்கா நன்றி தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் கிரி்ககெட் திருவிழா முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அதை தக்கவைக்கவும், ஏற்கனவே 4 முறை கோப்பை வென்றுள்ள சென்னை அணி 5-வது முறையாக முடிசூடவும் காத்திருக்கின்றன.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் இறுதிக்கட்ட ஓவர்களை பிரமாதமாக வீசி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள மதிஷா பதிரானாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை அணியின் புதிய கண்டுபிடிப்பான அவருக்கு 20 வயதே ஆகியுள்ள நிலையில், தோனியின் ஆதரவில் வருங்காலத்தில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று கிரிக்கெட் வர்ணணையாளர்கள் கூறி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/dhoni-Pathirana.jpg)
இதனிடையே முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், போட்டி முடிந்தவுடன் பதிரானாவின் குடும்பத்தை கேப்டன் தோனி சந்தித்து பேசியுள்ளார். எங்கள் பதிரான ஒரு நல்ல பாதுகாவலரின் கையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று பதிரானாவின் குடும்பத்தினர் கூறிய நிலையில், நீங்கள் பதிரானா குறித்து எந்த கவலையும் பட வேண்டாம் அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கேப்டன் தோனி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கேப்டன் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் லிசித் மலிங்கா, தோனி எங்கள் குட்டி பதிரானாவை எங்களுக்கு இன்னொரு மலிங்கா கிடைக்கும் அளவுக்கு தயார் செய்துள்ளீர்கள். உங்களின் இந்த உதவியை எஙகள் நாடு என்றைக்கும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.