கிரிக்கெட்டில் கேட்ச் பிடிப்பதென்பது தனி கலை. ஸ்லிப், மிட் ஃபீல்ட், டீப் மேன் கவர் என்று கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் எப்போது கேட்ச் வரும் தெரியாது. ஆனால், வரும் போது லபக் என்று பிடித்திட வேண்டும்.
இந்த லபக் ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. கூர்மையான பார்வை, கணிக்கும் திறம், 3 வயது குழந்தையைப் போன்ற சுறுசுறுப்பு, அசாத்திய நகர்வுகள் என இத்தனை விஷயங்களும், ஒருசேர கொண்டவர்களே சிறந்த பீல்டர்களாகும் தகுதி கொண்டவர்கள்.
டியூக் Vs கூக்கபுரா Vs எஸ்ஜி – பேட்ஸ்மேன்ஸ் அலறும் கிரிக்கெட்டின் ‘மூன்றுமுகம்’
இப்படி ஒரு வித்தகனாக ஜாண்டி ரோட்ஸ் விதைத்த விதையில் யுவராஜ், கைஃப் தொடங்கி இன்று ஜடேஜா, ரெய்னா, ரோஹித், கோலி, என்று பேட்ஸ்மேன் கம் பெஸ்ட் ஃபீல்டர்கள் இந்திய அணியில் உருவாகியுள்ளனர்.
ஆனால், மைதானத்தில் ஏதோவொரு இடத்தில் நின்று கொண்டு பாய்ந்து ஃபீல்டிங் செய்வதற்கும், பவுலிங் செய்து கொண்டே அதே வேகத்தில் ஃபீல்டிங் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளன. பெஸ்ட் ஃபீல்டர்கள் என்ற பெயரைத் தாண்டி, 'அவன் நிக்குற பக்கம் அடிக்காத' என்று பேட்ஸ்மேனை எச்சரிக்கை வைக்கும் கொடூர ஃபீல்டர் என்ற பெயர் கொண்டவர்களே இதனை செய்ய முடியும்.
அப்படி ஒரு சம்பவமே இந்த வீடியோ. இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஸ்பின் பவுலர் ஒருவரின் இரண்டு அனாயச கேட்ச்சை நீங்கள் பார்க்கலாம்.
அவரது பந்தை, அவ்வளவு வேகமாக பேட்ஸ்மேன்கள் அடித்தும், பந்து வீசிய அடுத்த நொடி அதை பாய்ந்து பிடித்து மிரள வைத்திருக்கிறார். அவ்விரண்டு பெஸ்ட் கேட்ச்களும் ஒரே ஓவரில் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil