India vs New Zealand {IND VS NZ } 1st ODI Match report in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.
Advertisment
307 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் மிகசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் 104 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் ஜோடியில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன், தனது விதிவிலக்கான நிதானத்தை வெளிப்படுத்தி 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து, 165 பந்துகளில் 221 ரன்களைச் சேர்த்தனர்.
50 ஓவர்களில் 17 பந்துகள் மீதமிருந்த நிலையில், 309 ரன்களை குவித்த நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தினர். மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.
Advertisment
Advertisements
உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியான நியூசிலாந்து, சொந்த மண்ணில் நடந்த கடைசி 13 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் உள்ளனர்.
முன்னதாக, ஷ்ரேயாஸ் ஐயர் (80), ஷிகர் தவான் (72) மற்றும் ஷுப்மான் கில் (50) ஆகியோரின் அரை சதங்களும், வாஷிங்டன் சுந்தரின் கேமியோவும் இந்தியாவை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. இடைவேளையின் போது, வாஷிங்டன், இது ஒரு நல்ல ஒரு ஸ்கோராக இருப்பதாக தான் நினைத்ததாகக் கூறினார். ஆனால் இறுதியில் அது நடக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இந்த ஃபார்மெட்டில் அறிமுகமானதால், இந்தியா ஒரு அனுபவமற்ற பந்துவீச்சு தாக்குதலுடன் விளையாடியது. அணியில் ஆறாவது பந்துவீச்சு விருப்பம் இல்லாததால், அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, நியூசிலாந்து இலக்கை நெருங்கிய போது.
கடைசி 11 ஓவர்களில் நியூசிலாந்துக்கு 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, அந்த அணியின் வெற்றிக்கு 91 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு விரைவான விக்கெட்டுகள் இந்தியாவுக்கு கிடைத்திருந்தால், தொடர்நது விக்கெட் வேட்டை நடத்தி நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் அப்போதுதான் லாதம் ஆட்டத்தை நியூசிலாந்தை நோக்கி தீர்க்கமாக மாற்றி இருந்தார்.
ஷர்துல் தாக்கூர், அதுவரை, ஏழு ஓவர்களில் 29 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். ஆனால், அவர் வீசிய 40வது ஓவரில் லாதம் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தார். ஏறக்குறைய ஒவ்வொரு பவுண்டரிக்கு பிறகும் இந்தியா ஃபீல்டிங்கை மாற்றியது. ஆனால் லாதமை தடுக்க முடியவில்லை. தாக்கூரும் அவருக்கு பலமுறை ஷார்ட் மற்றும் சில சமயங்களில் லெக் சைடுக்கு கீழே பந்துவீசினார். அவரின் திட்டம் பளிக்கவில்லை.
அந்த ஓவரின் தொடக்கத்தில், 77 ரன்களில் இருந்த லாதம், அதன் முடிவில், தனது ஏழாவது ஒருநாள் சதத்தை 76 பந்துகளில் எடுத்து மிரட்டினார். லாதமின் தாக்குதலால் நியூசிலாந்தின் வெற்றிக்கு 60 பந்துகளில் ரன்கள் 66 ஆகக் குறைந்தது. இறுதிக் கோட்டைத் தாண்டிய நேரத்தில், அவர் பந்துவீச்சாளர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை கவர் திசையில் அடித்து நொறுக்கினார். அவர் விரும்பிய பகுதிக்கு அவர்களை பந்துவீச செய்தார். யுஸ்வேந்திர சாஹலையும் கீப்பருக்குப் பின்னால், பேட்டின் பின்புறத்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். இறுதியில் கேப்டன் வில்லியம்சன் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.