India vs England, 5th Test, Dharamsala | Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். இவர் கடந்த காலங்களில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், நாளை வியாழக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஸ்வினின் 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இந்த நிலையில், 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் அஸ்வினுக்கு வாழ்த்து சொல்ல லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அவரை போனில் தொடர்பு கொண்டதாகவும் மற்றும் மெசேஜ் அனுப்பியதாகவும், எதற்கும் அஸ்வின் பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாகிய தங்களுக்குக் வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்றும் அவர் அஸ்வினை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அவரது (அஸ்வின்) 100வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரை போனில் அழைத்தேன். எனது அழைப்பை அவர் துண்டித்துவிட்டார். அவருக்கு குருஞ்செய்தி அனுப்பினேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை. இதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை." என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
Tried calling him a few times to wish him for his 100th Test. Just cut off my call. Sent him a message, no reply. Thats the respect we former cricketers get
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 6, 2024
முன்னதாக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், அஸ்வின் பந்துவீசும் விதம் சரியில்லை என்று ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். அஸ்வின் தன்னை தொடர்பு கொண்டால் தான் அவருக்கு உதவ முடியும் என்றும் கூறியிருந்தார். இதேபோல், அஸ்வின் பற்றி புகார் கூறும் வகையில், அஸ்வின் இந்திய மைதானங்களில் பிட்ச்களை சேதம் செய்துதான் அதிக விக்கெட்களை வீழ்த்தினார் என்றும், மைதான ஊழியர்களிடம் பிட்ச்சில் எங்கே சேதம் செய்ய வேண்டும் என கூறுவார் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் மற்றும் தோனிக்கு அஸ்வின் துரோகம் செய்தார் என அது தொடர்பான சில சம்பவங்களை அவர் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
“மரியாதை பண்பட்டவர்களிடம் இருந்துதான் வருகிறது. நான் முன்பு அவரது பவுலிங் ஆக்சன் குறித்து சிறிய திருத்தம் பற்றி ட்வீட் செய்தேன். அவரை நான் விமர்சிக்கவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக போராடுகிறார்கள், ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. SENA நாடுகளில் அவரது சாதனையைப் பாருங்கள். அவர் ஒரு 'சுயநல புள்ளிவிவர வீரர்'.
இந்திய கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனியின் கீழ் 2011 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடவில்லை என்றால், அவர் இந்திய அணியில் அறிமுகமாக்குவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அந்த நேரத்தில் ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்தார். சி.எஸ்.கே மற்றும் எம்.எஸ் தோனிக்காக இல்லையென்றால், இந்தியாவுக்காக விளையாட அவர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அஸ்வின் இந்தியா சிமென்ட்ஸ் அணியில் இருந்து விலகி போட்டி நிறுவனமான செம்ப்ளாஸ்டில் அணியில் சென்று சேர்ந்தார். பெரிய மனிதரிடமிருந்து என்ன விசுவாசம் இருக்கிறது என்று பாருங்கள். அதற்காக நீங்கள் அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும்." என்று முன்பு லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Tried calling him a few times…no reply. That’s the respect we former cricketers get’: Laxman Sivaramakrishnan takes a jibe at R Ashwin ahead of his 100th Test
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.