Advertisment

'கனவுகளை கைவிடக் கூடாது': கால்பந்து கரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மெஸ்ஸி அட்வைஸ்

கால்பந்து கரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ள மெஸ்ஸி 'கனவுகளை என்றும் கைவிடகூடாது' என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lionel Messi on his career

நட்பு ஆட்டத்தின் போது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. (புகைப்படம் - ஏபி)

Lionel Messi Tamil News: கால்பந்து உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணியை வழிநடத்தி வரும் இவர் கடந்த ஆண்டில் நடந்த ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் தனது தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்த உலகக் கோப்பையில், அவர் தனது இரண்டாவது கோல்டன் பந்தை வென்றும் இருந்தார்.

Advertisment

எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் 35வயதான மெஸ்ஸி, கால்பந்து உலகின் உயரிய விருதான பலோன் டி'ஓர் ( Ballon d'Or) விருதுகளை 7 முறை வென்றுள்ளார். 43 கோப்பைகள், சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள் என பலவற்றையும் வாகை சூடிய வீரராக உள்ளார்.

உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக, மெஸ்ஸியின் வாழ்க்கை பல தனிநபர் மற்றும் குழு சாதனைகளால் குறிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க கால்பந்து வீரராக, அவரது வாழ்க்கையில் நம்பமுடியாத விஷயங்களைச் சாதித்துள்ளார்.

publive-image

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில், மெஸ்ஸி தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசினார். மேலும் 'எல்லாவற்றிலும் சாம்பியனாக' தலைவணங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடிடாஸ் கால்பந்துக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி பேசுகையில், "இப்போது எனது தொழில் வாழ்க்கையின் முடிவில் எல்லாவற்றிலும் ஒரு சாம்பியனாக முடிவெடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல. அதற்கான பயணமே மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மேலும் சாதிக்க ஆசை, முயற்சி செய்வதற்கான விருப்பம், குறிப்பாக விஷயங்கள் செயல்படலாம் அல்லது செயல்படாதபோது முக்கியம் என்று நான் நம்புகிறேன். கனவுகளை என்றும் கைவிடகூடாது." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Football Lionel Messi Argentina Fifa Fifa World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment