லியோனல் மெஸ்ஸி இறுதியாக மாபெரும் வெற்றியை ருசித்தார். லுசைல் மைதானத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்த அர்ஜென்டினா மந்திரவாதி உலகக் கோப்பையை தனது கைகளில் பிடித்ததன் மூலம் இனிவரும் கால்பந்து நாட்டுப்புறக் கதைகளில் தன் பெயரை பொறித்துக் கொண்டார்.
Advertisment
போட்டி முடிந்ததும், சுற்றி நடந்த கொண்டாட்டத்தின் மத்தியில் மெஸ்ஸி தனது தாயுடன் ஒரு மென்மையான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார். மைதானத்தின் நடுவே இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தோஹாவின் வடக்கே லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த வியத்தகு ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரர் கோன்சாலோ மான்டீல் தீர்க்கமான பெனால்டியை அடித்ததால் அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. கிங்ஸ்லி கோமன் மற்றும் ஆரேலியன் டிச்சௌமேனி ஆகியோர் பிரான்ஸ் அணிக்காக பெனால்டிகளை தவறவிட்டதால் ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-2 என வெற்றி பெற்றது.
92 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில், 35 வயதான மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்தார், 3-3 என்ற சமநிலைக்குப் பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா மூன்றாவது உலகக் கோப்பையை வென்றது. இதற்கு முன்பு இந்த அணி 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது.
இவை அனைத்திற்கும் மத்தியில், பிரான்ஸ் அணியின் முன்னனி வீரர் கைலியன் எம்பாப்பே - 56 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் முதல் ஹாட்ரிக் அடித்தார். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே பிரேசில் ஜாம்பவான் பெலே-வை போல, தனது முதல் இரண்டு உலகக் கோப்பைகளில் சாம்பியனாக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.
ஆனால் இப்போது விவாதத்துக்கு இடமில்லை. மூன்று முறை உலகக் கோப்பை சாம்பியனான பெலேவுடன் மெஸ்ஸி இணைகிறார் - மேலும் மெஸ்ஸி உடன் அடிக்கடி ஒப்பிடப்பட்ட மறைந்த அர்ஜென்டினா ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் எப்போதும் சிறந்த கால்பந்து வீரர்களின் பிரத்யேக கிளப்பில் இடம்பிடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“