By: WebDesk
Updated: November 11, 2018, 10:51:11 PM
LIVE Cricket Score, IND vs WI T20 Live Score
LIVE Cricket Score. IND vs WI T20: இந்தியா, வெஸ்ட் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாய் வென்ற இந்திய அணி, அடுத்ததாக நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கைப்பற்றியது.
தொடர்ந்து, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதலிரண்டு போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதி டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இரண்டு போட்டிகளில் ஆடிய பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதன்பிறகு, ஒருவருடம் கழித்து இப்போது தான் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.
அதுவும் சேப்பாக்கத்தில் இதுவரை ஒரேயொரு சர்வதேச டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2012ம் ஆண்டு இந்தியாவும், நியூசிலாந்தும் அந்தப் போட்டியில் மோதியிருந்தன. புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு, யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைத்த முதல் போட்டி அது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
அந்தப் போட்டிக்குப் பிறகு, இப்போது 6 வருடம் கழித்து இந்திய அணி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். பட், ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்.
3வது டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:ரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் (wk), மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, ஷாபஸ் நதீம், சித்தார்த் கவுல்.
LIVE Cricket Score. India vs West Indies 3rd T20 Match: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டு
இரவு 10: 40 – இந்தியா வெற்றிப் பெற்ற அந்த கடைசி பந்தின் த்ரில் மொமன்ட்ஸ்,
இரவு 10:25 – கடைசி ஓவரில், இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அல்லென் அந்த ஓவரை வீசினார். அந்த ஓவரில், தவான் 92 ரன்னில் அவுட்டானார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. மனீஷ் பாண்டே சிங்கிள் எடுக்க முயற்சி செய்த போது, ரன் அவுட் மிஸ் ஆனது. இதனால், கடைசி பந்தில் இந்திய அணி வென்றது.
இரவு 10:05 – ரசிகர்களின் ஃபிளாஷ் லைட்டுகளில் மிளிரும் சேப்பாக்கம்.
இரவு 09: 45 – ஷிகர் தவான் அரைசதம் விளாசினார். ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
இரவு 09:25 – 10 ஓவர்கள் முடிவில் இந்தியா, 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
இரவு 09:10 – லோகேஷ் ராகுல் 17 ரன்னில் தாமஸ் ஓவரில் அவுட்டானார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
இரவு 09:00 – கேப்டன் ரோஹித் ஷர்மா 4 ரன்னில் அவுட்டானார். 4 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
இரவு 08:30 – மூன்று ஓவர்கள் வீசி, வெறும் 14 ரன்கள் மட்டுமே கலீல் அஹ்மது கொடுத்திருந்தார். 18வது ஓவரில் கூட 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால், அவரது கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்கள் எடுத்தது.
மாலை 06:50 – மைதானத்திற்குள் படையெடுக்கும் ரசிகர்கள்
மாலை 06:40 – டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ‘சென்னையில் பெரும்பாலான அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்’ என்று காரணம் கூறி அவர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மைதானத்திற்கு வெளியே திரண்டிருக்கும் ரசிகர்கள்
மாலை 06:30 – தோனி இல்லாத இந்திய அணியை காண முதன்முறையாக தயாராகி வரும் சேப்பாக்கம் மைதானம்.