Ind Vs SL Live Update : மூன்றாவது டெஸ்ட் 2வது நாள் : இந்தியா 536/7 ரன் குவிப்பு

இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி ஆடி வருகிறார்

இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி ஆடி வருகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Sri Lanka, India vs Sri Lanka 3rd Test, India vs Sri Lanka Live Score, Ind vs SL, Ind vs SL 3rd Test, Ind vs SL, Live Score India vs Sri Lanka 3rd Test Match

India's captain Virat Kohli calls for a run during the first day of their third test cricket match against Sri Lanka in New Delhi, India, Saturday, Dec. 2, 2017. (AP Photo/Altaf Qadri)

இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. கேப்டன் விராட் கோலி, விஜய் ஆகியோரின் சதத்தால், இந்திய அணி 371 ரன்களை குவித்துள்ளது.

Advertisment

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஷிகார் தவான், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினர். ஷிகார் தவான் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாராவும் ஒருநாள் போட்டி போல ரன்களை குவிக்க ஆரம்பித்தார். அவரை 23 ரன்களில் இலங்கை அணி மடக்கியது.

கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் நிதானமாகவும் அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ரன்களை சேகரித்தனர். தன்னுடையை கில்லி ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், தனது 11வது டெஸ்ட் சதத்தை எட்டினார். கேப்டன் விராட் கோலி தனது விவேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 110 பந்தில் அவரும் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 20வது சதம் இதுவாகும். அதோடு அவர் 5000 ரன்களை தாண்டி சாதனைப்படைத்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 283 ரன்களை சேர்த்தது. 155 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய், சண்டகன் சுழலில் சிக்கி ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரஹானா வந்த வேகத்தில் திரும்பினார். அவர் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கேப்டன் விராட் கோலியுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். ரோஹித் 6 ரன்கள் இருந்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. கேப்டன் விராட் கோலி 156 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளது.

Advertisment
Advertisements

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 536/7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். அவர் 243 ரன்கள் எடுத்திருந்தார். இப்போது இலங்கை பேட்டிங்க் செய்து வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: