கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று செம தீனி: இலங்கை vs தென்னாப்பிரிக்கா Live Cricket Score

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று செம தீனி காத்திருக்கிறது.

Srilanka vs South africa 1st ODI

ஆம்! இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒயிட் வாஷ் ஆனது. இலங்கை ஸ்பின்னர்களிடம் டோட்டல் சரண்டர். அட்லீஸ்ட், டிரா கூட செய்ய முடியாமல் அடி பணிந்தது தென்னாப்பிரிக்கா. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

விட்டத புடி:

இதில், முதல் போட்டி டம்புலாவில் தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் வாங்கிய அடியை, பாரபட்சம் இல்லாமல், வட்டி போட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் தென்னாப்பிரிக்கா தீவிரமாக உள்ளது.

டி வில்லியர்சின் திடீர் ஓய்வு, அந்த அணிக்கு நிச்சயம் சறுக்கல் தான். இருப்பினும், ஆம்லா, டி காக், கேப்டன் டு பிளசிஸ், டுமினி, மில்லர் என்ற பலம் வாய்ந்த அணியே இன்று களமிறங்கியுள்ளது.

அதேசமயம், உள்ளூரில் சமீப காலமாக மரண அடி வாங்கி வந்த இலங்கை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்களது பெருமையை மீட்டெடுக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.

இதனால், இன்றைய போட்டி, இந்தியா விளையாடும் ஆட்டங்களை மட்டும் பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட, கிரிக்கெட் காதலர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டினை இங்கே நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Live cricket score sri lanka vs south africa 1st odi live streaming

Next Story
எப்போதாவது விளாசும் சூறாவளி மார்டின் கப்தில்! என்னா அடி!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com