IND vs WI Cricket: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற, விசாகப்பட்டினத்தில் நடந்த பரபரப்பான இரண்டாவது போட்டி டிராவானது.
இந்நிலையில், இன்று புனேவில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(c), அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(w), ரிஷப் பண்ட், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மத், யுவேந்திர சாஹல்.
இரவு 07:00 - தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் அவுட்டானார்கள். விராட் கோலி 43 ரன்களுடன் களத்தில் உள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடி, இன்று 38வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்வாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிற்பகல் 03:40 - முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியாவை பெருமளவில் அச்சுறுத்திய ஹெட்மயர், குல்தீப் பந்தில் 37 ரன்களில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
பிற்பகல் 02:00 - பும்ரா பந்தில் 15 ரன்களில் தொடக்க வீரர் ஹேம்ராஜ் அவுட்டானார். கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனியின் சிறப்பான கேட்சில் இதுவும் ஒன்று என்று கூட கூறலாம்.
மதியம் 01:30 - இதோ, மூன்றாவது ஒன்டே மேட்ச் தொடங்கியது.
மதியம் 01:20 - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா அளித்திருக்கும் மரியாதையே இந்தப் போட்டியில் அணியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் உணர்த்துகிறது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால், பும்ரா மற்றும் புவனேஷ் உடனடியாக அணிக்குள் கொண்டுவரப்பட்டு இன்று சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.