பார்ட்டி மேனுக்கு விவகாரமான பிறந்தநாள் வாழ்த்து – வாங்கிக் கட்டிய லோகேஷ் ராகுல்

இவ்வளவு கீழ்த்தரமாகவா பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வீர்கள் என்றும், ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவதில் அவ்வளவு சந்தோஷமா?' என்றும் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்

By: Published: September 23, 2019, 4:59:21 PM

‘பார்ட்டி மேன்’ க்றிஸ் கெயில் கடந்த செப்.21ம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடித் தீர்க்க, அவருக்கு ஜாலியாக வாழ்த்துத் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் ராகுல்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க செய்தியை பார்ப்பதற்கு முன்பு, கடந்த கால வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை தெரிந்து கொள்வோம். அப்போது தான் மேட்டரே புரியும்.


ஆஸ்திரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த பிக் பேஷ் லீக்கில் மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிய கெயிலை ‘நெட்வொர்க் டென்’ பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ, “நானே உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண்ணி அடிக்கப் போலாமா?” எனச் சொல்லி சிரித்துவிட்டு, “வெட்கப்படாதே பேபி (Don’t blush, baby)” என்று வழிந்தார்.

கெயிலின் இந்த வழிசலை ரசிகர்கள் விமர்சிக்க, “நான் விளையாட்டாகத்தான் கூறினேன். அது அவரை காயப்படுத்தினால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பல்டி அடித்தார் சிக்சர் மன்னன்.

இப்போது நிகழ் காலத்துக்கு வருவோம்… கெயிலுக்கு வாழ்த்துத் தெரிவித்த லோகேஷ் ராகுல், ” Dont blush boss. Wish u many more legend” என்று வாழ்த்தி இருக்கிறார்.


அந்த மோசமான சம்பவத்தை கெயிலுக்கு மீண்டும் நினைவூட்டிய ராகுலை, ‘இவ்வளவு கீழ்த்தரமாகவா பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வீர்கள் என்றும், ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவதில் அவ்வளவு சந்தோஷமா?’ என்றும் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Lokesh rahul slammed by netizens wishing chris gayle birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X