LSG vs CSK Playing 11 Prediction in tamil: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நாளை பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி 4ல் தோல்வியுடன் 10 புள்ளிகள் மற்றும் +0.329 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக மோதிய ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. அதனால், சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பவே முயலும். தவிர, 2 தொடர் தோல்விகள் சென்னை அணியின் நிர்வாகத்தை யோசனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, ஆடும் லெவனில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக, பந்துவீச்சு வரிசையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
அணிக்கு திரும்பும் ஸ்டோக்ஸ் - சாஹர்?
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷா பத்திரனா மற்றும் ஆகாஷ் சிங் இருவரும் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்கள் முழுவதும் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் நாளை ஆட்டத்திற்கு தயாராக இருந்தால், அவர்கள் இருவரும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை.
காயம் தொடர்பான கவலைகள் காரணமாக, இந்த கட்டத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் சாஹர் 7 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். வரவிருக்கும் போட்டிகளுக்கு அவர்கள் இடம் பிடிப்பது குறித்து அணி நிர்வாகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.