/indian-express-tamil/media/media_files/2025/04/14/NUaBO91qtJi6DV7UmvMc.jpg)
ஐ.பி.எல். 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 30-வது லீக் போட்டி, லக்னோ.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 30-வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
லக்னோ பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. இதையடுத்து, லக்னோ அணி பேட்டிங் ஆட களம் புகுந்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்ற இந்த ஜோடியில் மார்க்ரம் 6 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025
அவருக்குப் பின் வந்த நிக்கோலஸ் பூரன் 8 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார். 2 பவுண்டரி, 2 சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் 30 ரன்னில் அவுட் ஆனார். இதன்பிறகு, களத்தில் இருந்த ஆயுஷ் படோனி - ரிஷப் பண்ட் ஜோடி சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்த நிலையில், 2 சிக்ஸரை பறக்கவிட்ட ஆயுஷ் படோனி 22 ரன்னில் தோனி எடுத்த ஸ்டம்ப்-பிங்கில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த அப்துல் சமத் 20 ரன் எடுத்து ரன்-அவுட் ஆகினார். களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 4 சிக்ஸரை பறக்கவிட்டு அரைசதம் அடித்த கேப்டன் பண்ட் 63 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை அணி தரப்பில், மதீஷா பத்திரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றிப் பாதைக்கு திரும்பிய சென்னை
தொடர்ந்து, 167 ரன்கள் கொண்ட சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விரட்டினர். 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது.
ஆனால், தொடக்க வீரர் ஷேக் ரஷீத் 27 ரன்னில் ஆட்டமிழக்கவே, சென்னை அணியின் கெட்ட நேரம் தொடங்கியது. மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 37 ரன்னில் அவுட் ஆனார். களத்தில் இருந்த ராகுல் திரிபாதி 9 ரன்னுக்கும், அவருடன் ஜோடி அமைத்திருந்த ஜடேஜா 7 ரன்னுக்கும், விஜய் சங்கர் 9 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு சென்னை அணி பேட்டிங்கை மந்தப்படுத்தியது. ஆனாலும், களத்தில் இருந்த தோனி - துபே ஜோடி சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸரை பறக்கவிட்டு வந்தனர். சென்னை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 56 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். கையை விட்டு நழுவிக் கொண்டிருந்த போட்டியை மீண்டும் தங்கள் பக்கம் இழுத்தனர்.
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது, அவேஷ் கான் வீசிய 20-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் துபே, தோனி ஒரு ரன் எடுத்தனர். 3வது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் துபே. கடைசி வரை ஆட்டமிழக்காத துபே 37 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்தார். அதிரடி காட்டிய தோனி 11 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில், வெற்றி இலக்கை எட்டிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
-
Apr 14, 2025 23:32 IST
வெற்றிப் பாதைக்கு திரும்பிய சென்னை!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நிலையில், களத்தில் இருந்த தோனி - துபே ஜோடி அணி வெற்றி இலக்கை அடைவதை உறுதி செய்தனர்.
சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
-
Apr 14, 2025 23:17 IST
18 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், தோனி - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை.
-
Apr 14, 2025 23:12 IST
17 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், தோனி - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை.
-
Apr 14, 2025 23:03 IST
16 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், தோனி - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 44 ரன்கள் தேவை.
-
Apr 14, 2025 22:57 IST
15 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், தோனி - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 56 ரன்கள் தேவை.
-
Apr 14, 2025 22:49 IST
14 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், விஜய் சங்கர் - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு பந்துகளில் 36 ரன்கள் 58 தேவை.
-
Apr 14, 2025 22:46 IST
13 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், விஜய் சங்கர் - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு பந்துகளில் 43 ரன்கள் 64 தேவை.
-
Apr 14, 2025 22:41 IST
ஜடேஜா அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ஜடேஜா 7 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Apr 14, 2025 22:39 IST
12 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:33 IST
11 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:29 IST
10 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:26 IST
9 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா - துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 91 ரன்கள் தேவை
-
Apr 14, 2025 22:23 IST
ராகுல் திரிபாதி அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ராகுல் திரிபாதி 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Apr 14, 2025 22:23 IST
8 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா - ராகுல் திரிபாதி ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:22 IST
ரச்சின் ரவீந்திரா அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரச்சின் ரவீந்திரா 37 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
-
Apr 14, 2025 22:15 IST
7 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:09 IST
6 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 22:08 IST
ஷேக் ரஷீத் அவுட் - 5 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் நிலையில், 5 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் ஷேக் ரஷீத் 6 பவுண்டரிகளை விரட்டி 27 ரன்னில் அவுட் ஆனார். தற்போது ரச்சின் ரவீந்திரா - ராகுல் திரிபாதி ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள்.
-
Apr 14, 2025 21:30 IST
சென்னை அணி 167 ரன்கள் வெற்றி இலக்கு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பண்ட் 63 ரன்கள் எடுத்தார். இதையடுத்து. சென்னை அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
Apr 14, 2025 21:23 IST
20 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் பண்ட் 63 ரன் எடுத்தார்.
-
Apr 14, 2025 21:19 IST
பண்ட் அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், 20 ஓவரின் 3-வது பந்தில் அரைசதம் அடித்த பண்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 63 ரன் எடுத்தார்.
-
Apr 14, 2025 21:17 IST
அப்துல் சமத் ரன் அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், 20 ஓவரின் 2-வது பந்தில் வேகமாக ஓட முயன்ற அப்துல் சமத் தோனியின் அதிரடி த்ரோவில் ரன் அவுட் ஆனார்.
-
Apr 14, 2025 21:14 IST
19 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 21:13 IST
பண்ட் அரைசதம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ அணியின் கேப்டன் பண்ட் 43 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
-
Apr 14, 2025 21:08 IST
18 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 21:01 IST
17 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:54 IST
16 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:50 IST
15 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:49 IST
14 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:45 IST
ஆயுஷ் படோனி அவுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆயுஷ் படோனி 22 ரன்னில் அவுட் ஆனார்.
-
Apr 14, 2025 20:43 IST
13 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் 103 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:42 IST
12 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் 93 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:42 IST
11 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் 81 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 20:41 IST
10 ஓவர்கள் முடிவில் லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் லக்னோ பேட்டிங் ஆடி வருகிறது. சென்னை பவுலிங் போட்டு வருகிறது. போட்டி பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், லக்னோ 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் 78 ரன்கள் எடுத்துள்ளது.
-
Apr 14, 2025 19:43 IST
இரு அணி வீரர்கள் பட்டியல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(கேப்டன்/விக்கெட் கீப்பர்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
-
Apr 14, 2025 19:08 IST
டாஸ் வென்ற சென்னை பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடுகிறது. அதனால், லக்னோ முதலில் பேட்டிங் ஆடுகிறது.
-
Apr 14, 2025 18:44 IST
தோனி ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல - சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேச்சு
"தோனியின் செல்வாக்கு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் அவர் ஒன்றும் ஜோசியக்காரர் அல்ல. அவரிடம் ஒரு மந்திரக்கோலும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர் வெற்றியை முன்பே கொண்டு வந்திருப்பார். நாங்கள் தோனியுடன் சேர்ந்து வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம், நிச்சயமாக, எங்கள் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும், அதிக ஆற்றல் தேவைப்படும் சூழ்நிலைகளில் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.
நாங்கள் அதை சிறிய படிகளாக கவனித்து 3 துறைகளிலும் சிறந்து விளங்க தொடர்ந்து உழைக்க வேண்டும். அதன் பின்னர் போட்டியிடத் தொடங்க வேண்டும். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் நாங்கள் போதுமான போட்டியை வெளிப்படுத்தாதது மிகவும் வேதனையாக இருந்தது. எனவே, நிச்சயமாக உள்ளுக்குள் நிறைய தேடல்கள் இருந்தன. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய நிறைய வேலைகளும் இருந்தன. நாங்கள் உத்வேகத்தைப் பெறுவதற்கு எங்களிடம் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. அவை வார்த்தைகளைப் பற்றியது அல்ல. அது எங்கள் வீரர்கள் எந்த சூழ்நிலைகளையும் சமாளிப்பதை பற்றியதாகும்" என்று சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
-
Apr 14, 2025 18:09 IST
நேருக்கு நேர்
ஐ.பி.எல் போட்டிகளில் சி.எஸ்.கே மற்றும் எல்.எஸ்.ஜி அணிகள் இதுவரை 5 போட்டிகளில் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் சி.எஸ்.கே 1 முறை வென்றுள்ளது, அதே நேரத்தில், எல்.எஸ்.ஜி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
-
Apr 14, 2025 18:06 IST
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அன்புடன் அழைக்கிறோம்!
ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.