Lucknow Super Giants vs Chennai Super Kings IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 34-வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே லக்னோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs CSK Live Score, IPL 2024
டாஸ் வென்ற லக்னோ பவுலிங் - சென்னை பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
சி.எஸ்.கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 1.1 ஓவரில் மோசின் கான் வீசிய முதல் பந்திலேயே போல்ட் அவுட் ஆகி கோல்டன் டக் அவுட் ஆனார். இதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய வந்தார்.
சி.எஸ்.கே அணி 4.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்தபோது, யஷ் தாக்கூர் பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் க்டொஉத்து அவுட் ஆனார். அடுத்து, ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.
சி.எஸ்.கே அணி 8.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தபோது, 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்த ரஹானே, க்ருனால் பாண்டியா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஷிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார்.
சி.எஸ்.கே அணி 11.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷிவம் துபே 3 ரன்கள் மட்டுமே எடுத்து, மார்கஸ் ஸ்டாயினிஸ் பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வி 1 ரன் மட்டுமே எடுத்து, க்ருணால் பாண்டியா பந்தில், கே.எல். ராகுலிடம் கேட்ச் அவுட் ஆனார். அடுத்து, மொயின் அலி பேட்டிங் செய்ய வந்தார்.
ரவீந்திர ஜடேஜா - மொயின் அலி ஜோடி அதிரடியாக விளையாடியது.
சி.எஸ்.கே அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தபோது, 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்த மொயின் அலி, ரவி பிஷ்னோய் பந்தில் ஆயுஷ் படோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, தோனி பேட்டிங் செய்ய வந்தார். தோனி சிக்சர் போர் என்று மைதானத்தையே அதிரடித்தார். அதே போல, மறுமுனையில், அதிராடியாக அடித்து ஆடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
இறுதியில் சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தோனி 9 பந்துகளில் 2 சிக்சர் 3 பவுண்டர்களுடன் 28 ரன்களும், ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம், சி.எஸ்.கே அணி 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டிகாக், கே.எல். ராகுல் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் அரை சதம் அடித்தார்.அவரைத் தொடர்ந்து குயிண்டன் டிகாக் அரைசதம் அடித்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14.6 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்தபோது, 43 பந்துகளில் 54 ரன்கள் அடித்திருந்த குயிண்டன் டிகாக் முஸ்தஃபிசுர் ரஹ்மான் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, நிகோலஸ் பூரண் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 17.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தபோது, 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்திருந்தபோது, பதிரானா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆடுத்து, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
நிகோலஸ் பூரண் - மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி லக்னோ அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.
இறுதியில் லக்னோ அணி, 19 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் பிளேயர்: சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சான்ட்னர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் பிளேயர்: அர்ஷின் குல்கர்னி, கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங், மணிமாறன் சித்தார்த், அர்ஷத் கான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.